
திண்டுக்கல் மத்திய சிறைச்சாலை லயன் தெருவைச் சேர்ந்தவர்கள் முருகேசன் – மகேஸ்வரி தம்பதி., கூலித் தொழிலாளியான இவர்களுக்கு ஐஸ்வர்யா என்ற 8 வயது பெண் குழந்தை மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது.தற்போது விடுமுறை நாட்கள் என்பதால் கடந்த ஒரு மாதமாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உச்சப்பட்டியில் உள்ள தனது பாட்டி அன்னம்மாள் வீட்டிற்கு வந்து பாட்டியுடன் சிறுமி ஐஸ்வர்யா இருந்து வந்தாக கூறப்படுகிறது.இந்நிலையில் இன்று வீட்டின் அருகே இருக்கும் ராமர் என்பவரது தோட்டத்தில் உள்ள 80 அடி ஆழ கிணற்றில் தோழிகளுடன் குளிக்க சென்ற ஐஸ்வர்யா நீரில் மூழ்கிய நிலையில் இது குறித்து தோழிகள் அக்கம் பக்கத்தினர் மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
சம்பவமறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் தங்கம் தலைமையிலான தீயணைப்புத்துறை வீரர்கள் கிணற்றில் கயிறு மூலம் இறங்கி சுமார் இரண்டு மணிநேர போராட்டத்திற்கு பின் ஐஸ்வர்யாவை பிணமாக மீட்டனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிசார் நீரில் மூழ்கி உயிரழந்த சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உசிலை சிந்தனியா