எரியாத உயர் மின் கோபுர விளக்கு ! இருளில் மூழ்கும் அபாயம்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த காஞ்சி- காரப்பட்டு கூட்ரோடு பகுதியில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது .ஆனால் கடந்த 7 மாத காலமாக எரிவதில்லை.இதனால் பொதுமக்களும் மற்றும் பேருந்து பயணிகளும் வணிகர்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறும்போது,“தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் கூட் ரோடு சந்திப்பில் அமைக்கப்பட்ட உயர்மின் கோபுர விளக்கு பல மாதங்களாக எரிவதில்லை. இப்பகுதி இருளில் மூழ்கிவிடுகிறது. அரசு மருத்துவமனை, வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் பொதுமக்கள் சாலையை கடக்கும் முக்கியமான இடமாக இருந்தும் அங்கு அடிக்கடி விபத்து நேரிடுகிறது. மேலும், சட்டமன்றம் தேர்தல் நடைபெறும் நிலையில் உயர்மின் கோபுர விளக்கு சரி செய்யப்படாமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது இதனை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

———————————————————————Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image