அரசியல் கட்சியினர் முன்னிலையில் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் வந்தது துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு இன்று அதிகாலை 5 மணிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்கு இயந்திரங்கள் 2 லாரிகளில் வந்து இறங்கியது. நிலக்கோட்டை சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபாகர் , நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்பையா ஆகியோர்கள் தலைமையிலும் , அ.தி.மு.க முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணகுமார், தி.மு.க நகர செயலாளர் கதிரேசன், தி.மு.க நகர பொறுப்பாளரகள் ஜோசப், தங்கராசு மற்றும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு மின்னணு பதிவு இயந்திரங்களை உரிய பாதுகாப்புடன் நிலக்கோட்டை தாலுகா அலுவலக பாதுகாப்பான அறையில் வைத்து சீல் வைத்து பூட்டப்பட்டது. அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபாகர் அரசியல் கட்சியினர் முன்னிலையில் கூறியதாவது: தற்போது நிலக்கோட்டை தொகுதிக்கு தேவையான வாக்கு இயந்திரங்கள் 462 மற்றும் இதர பொருட்கள் உள்பட மிகச் சரியான பாதுகாப்பு வசதியுடன் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் தாலுகா அலுவலகத்திற்கு பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசியல் பிரமுகர்கள் ஏதேனும் சந்தேகம் இருப்பின் எந்த நேரத்திலும் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் மற்றும் அலுவலக உதவியாளர்கள் அணியில் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம் என தெரிவித்தார்.படவிளக்கம்: நிலக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் முன்னிலையில் மின்னணு வாக்கு எந்திரங்களை இறக்கிய போது எடுத்த படம்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

———————————————————————Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image