காட்பாடியில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடிஆந்திர காரில் ரூ 1.56 லட்சம் பறிமுதல்.

வேலூர் .மார்ச் 9-ஆந்திராவிலிருந்து வேலூருக்கு வந்த காரில் தகுந்த ஆவணமின்றி எடுத்து வந்த ரூ 1.56 லட்சத்தை காட்பாடி செக்போஸ்டில் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.வேலூர் மாவட்டம் காட்பாடி கிறிஸ்தியான் பேட்டை செக்போஸ்டில் நேற்று முன்தினம் இரவு தேர்தல் பறக்கும் படைசங்கர் தலைமையில் ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த கிருஷ்ணா என்பவரின் காரை சோதனை செய்தபோது ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ 1.56 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.அவர் வேலூர் சிஎம்சி மருத்துவ மனைக்கு சிகிச்சை பெறபணம். எடுத்து வந்ததாக தெரிவித்தார்.ஆனால் அதற்கான ஆவணம் இல்லாத காரணத்தால் பணத்தை பறிமுதல் செய்தனர்.அதை காட்பாடி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணியகோட்டி உதவி அலுவலர் பாலமுருகனிடம் ஒப்படைத்தனர்.

———————————————————————Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image