திமுக கூட்டணியின் வெற்றிக்கு அயராது பாடுபட மனிதநேய மக்கள் கட்சி முடிவு…

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மேலப்பாளையத்தில், மனிதநேய மக்கள் கட்சியின் தேர்தல் பணிக்குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின், மேலப்பாளையம் பகுதி தலைவர் மைதீன் பாதுஷா தலைமை வகித்தார். செயலாளர் சேக் மைதீன் மற்றும் தமுமுக பகுதி செயலாளர் பாதுஷா, பொருளாளர் அசன் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனிதநேய மக்கள் கட்சியின், நெல்லை மாவட்ட தலைவர் கே.எஸ்.ரசூல் மைதீன், செயலாளர் டவுண் ஜமால், நெல்லை மாவட்ட தமுமுக தலைவர் அலிப் பிலால், துணை செயலாளர் காஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தேர்தல் பணிகளில் எவ்வாறு ஈடுபடுவது என்பது குறித்து விளக்கமாக எடுத்துக் கூறினர்.மாவட்ட தலைவர் ரசூல் மைதீன் பேசுகையில், அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சியில் மக்கள் பட்ட துன்பங்கள் துயரங்களை வீடுவீடாக,வீதிவீதியாக சென்று பிரச்சாரம் செய்வதுடன்,திமுக கூட்டணியின் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும், தி.மு.க.கூட்டணி வேட்பாளருக்கு, வீடு-வீடாக சென்று ஆதரவு திரட்டுவது! மேலப்பாளையம் மண்டலத்தில், அனைத்து வார்டுகளிலும், பூத் கமிட்டிகள் அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

———————————————————————Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image