மதுரையின் அடையாளங்களை 100% வாக்களிப்பு குறித்த விழிப்புணர்வாக ஏற்படுத்தும் மாவட்ட நிர்வாகம் .

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. அந்த வகையில் நூறு சதவிகித வாக்குப்பதிவு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,அந்தந்த மாவட்டங்களில் வாக்காளர் கையெழுத்து இயக்கம், மாதிரி வாக்குப்பதிவு நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் மதுரையின் பாரம்பரிய பண்பாட்டு பெருமை வாய்ந்த இடங்களானமதுரை மீனாட்சியம்மன் கோவில், தெப்பக்குளம், யானைமலை, மதுரை ஆட்சியர் அலுவலகம், திருமலை நாயக்கர் மகால் உள்ளிட்டவற்றை பேனர்களாக காட்சிப்படுத்தி வருகிறது.அதில் நம் வாக்கு நம் உரிமை, நூறு சதவிகிதம் வாக்களிப்போம், கைவிரல் மை தேசத்தின் வலிமை என்ற வாசகங்களோடு மக்கள் கூடும் இடங்களில் வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துக்கூறும் வகையில் பிளக்ஸ்கள் மாவட்ட நிர்வாகத்தால் வைக்கப்பட்டு வருகின்றன.இதன் மூலம் மதுரையில் தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகள் மிகத்தீவிரம் அடைந்துள்ளதோடு, இதுபோன்ற விழிப்புணர்வுகள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

———————————————————————Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image