வளிமங்கள் மற்றும் நீர்மங்களின் நிலை சமன்பாடு பற்றிய ஆய்வுக்கு புகழ் பெற்ற நோபல் பரிசு பெற்ற யோகான்னசு வான் டெர் வால்சு நினைவு நாள் இன்று (மார்ச் 8, 1923).

யோகான்னசு வான் டெர் வால்சு நவம்பர் 23, 1837ல் லைடன் நகர் நெதர்லாந்தில் பிறந்தார். அவரது சொந்த ஊரிலே ஆரம்ப கல்வி பயின்று முடித்தார். 1862 முதல் 1865 ஆம் ஆண்டில் தனது ஓய்வு நேரத்தில் லெய்டன் பல்கலைக்கழகத்தில் படித்தார். அப்போது கணிதம் மற்றும் இயற்பியல் பட்டம் பெற்றார். 1856 முதல் 1864 வரை டீவெண்டரில் இடைநிலை ஆசிரியராக கணிதம் மற்றும் இயற்பியல் கற்பித்தார். 1866 ஆம் ஆண்டில் அவர் த ஹாகிற்கு குடிபெயர்ந்தார், முதலில் ஆசிரியராகவும் பின்னர் அந்த நகரத்தில் உள்ள உயர்நிலை பள்ளிகளில் ஒரு இயக்குனராகவும் பணிபுரிந்தார். 1873 ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார். மேலும் எரிவாயு மற்றும் திரவ நிலையின் தொடர்ச்சியில் என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்தார். தனது ஆய்வில் வாயு மற்றும் திரவ நிலை இரண்டையும் தழுவிய ஒரு “சமன்பாடு நிலை”(Equation of State) பற்றி முன்வைத்தார். வளிமங்களின் நடத்தைகளைப் பற்றியும், அவற்றின் திரவ நிலை ஒடுக்கம் பற்றியும் கூறும் வான் டெர் வால்சு நிலைச் சமன்பாட்டில் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் நிலையான மூலக்கூறுகளுக்கிடையேயான வான் டெர் வால்ஸ் விசை உடனும், இவ்விசைகளால் கட்டுப்பட்ட சிறிய மூலக்கூற்றுக் கொத்துகள் வான் டெர் வால்சு மூலக்கூறுகளுடனும், வான் டெர் வால்சு ஆரைகளுடனும் சம்பந்தப்பட்டுள்ளது.

இரண்டாவது பெரும் கண்டுபிடிப்பு 1880 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது(The Law of Corresponding States). வெப்பநிலை, அழுத்தம், அளவு ஆகியவற்றின் அளவான மதிப்பீடுகளால், நிலையான சமன்பாட்டின் ஒரு பொதுவான வடிவம் அனைத்து பொருட்களுக்கும் பொருந்தும். வான் டெர் வால்ஸ் விதி, வான் டெர் வால்ஸ் ஆரம், வான் டெர் வால்ஸ் மேற்பரப்பு, வான் டெர் வால்ஸ் மூலக்கூறு போன்றவை பற்றி இவரது சிறந்த ஆராய்ச்சிகளாகும். ராயல் சொஸைட்டியில் 1896 முதல் 1912 வரை செயலாளராக பணியாற்றினார். 1908 ஆம் ஆண்டில் ஆம்ஸ்டெர்டாம் பல்கலைக்கழகத்தில் இருந்து ஓய்வு பெற்றார். 1910 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. நவீன மூலக்கூறு இயற்பியல் (மூலக்கூறு கோட்பாடு), வித்திட்ட இவர், மார்ச் 08, 1923 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..