Home செய்திகள் சிறு வயதிலேயே ஊட்டச்சத்தை வழங்குவதன் மூலம் பெண்களின் இரத்தச்சோகையை 57%-லிருந்து உலக சராசரியான 33%-க்கு இந்தியா குறைக்க வேண்டும்மீனாட்சி மிஷன் மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தல்.

சிறு வயதிலேயே ஊட்டச்சத்தை வழங்குவதன் மூலம் பெண்களின் இரத்தச்சோகையை 57%-லிருந்து உலக சராசரியான 33%-க்கு இந்தியா குறைக்க வேண்டும்மீனாட்சி மிஷன் மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தல்.

by mohan

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடைபெற்ற பெண்களின் உடல்நலத்தை மேம்படுத்துதல்: சவால்கள், சிகிச்சை மற்றும் உடல்நலப் பிரச்சனைகள் வராமல் தடுத்தல்” என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.இதில் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ துறையின் முதுநிலை நிபுணர் மற்றும் தலைவரான டாக்டர். எஸ். பத்மா மற்றும் குடல், இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர். பிஎல். அழகம்மை ஆகியோர் உரையாற்றினர்.பின்பு பேட்டியளித்த மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ துறையின் முதுநிலை நிபுணர் மற்றும் தலைவரான டாக்டர். எஸ். பத்மா,இந்திய பெண்களும் குழந்தைகளும் மிக அதிக அளவில் இரத்தசோகை உள்ளவர்களாக இருக்கின்றனர். மேலும் இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் அல்லது வைட்டமின் பி12 ஆகியவை அவர்களது உணவில் போதுமான அளவு இருப்பதில்லை என்பதே இரத்தசோகைக்கான பொது காரணமாக இருக்கிறது என்று இம்மருத்துவர்கள் அவர்களது உரையில் சுட்டிக்காட்டினர். கர்ப்ப காலத்தில் இரத்தசோகை என்பது, முதல் மற்றும் மூன்றாம் ட்ரைமெஸ்டர்களில் 11.0/g/dl – க்கு குறைவாகவும் ,இரண்டாவது ட்ரைமெஸ்டரில் 10.5 g/dl – க்கும் குறைவாகவும் ஹீமோகுளோபின் அளவு கர்ப்பிணி பெண்களிடம் இருப்பதை குறிக்கிறது. கர்ப்பிணி அல்லாதவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களைப் பொறுத்தவரை முறையே 12 g/dl மற்றும் 11g/dl என்பதற்கும் குறைவாக ஹீமோகுளோபின் அளவு இருப்பது அவர்களுக்கு இரத்தசோகை இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.நடத்தப்பட்ட விரிவான தேசிய ஊட்டச்சத்து சர்வேயின்படி, பள்ளிக்கு செல்லாத குழந்தைகளில் ஏறக்குறைய 41%, பள்ளிக்கு செல்லும் வயதுள்ள குழந்தைகளில் 24% மற்றும் வளரிளம் பருவத்தினரில் 28% நபர்கள் இரத்தசோகையுடன் இருக்கின்றனர் என்று அறியப்பட்டுள்ளது. இரும்புச்சத்து, ஃபோலிக் அமில மாத்திரைகளை வழங்குதல், சத்தான உணவு வழங்குதல், மற்றும் டீன்ஏஜ் பருவத்தினருக்கு குடற்புழு நீக்க மருந்துகளை உட்கொள்ளச் செய்வதும் முக்கியமானது என்று தங்களது உரையில் மருத்துவர்கள் வலியுறுத்தினர்.பெண்களின் இரத்தசோகைக்கு முக்கிய பங்கு வகிப்பதாக பல சமூக மற்றும் பொருளாதார காரணிகள் இருக்கின்றன என்பதை ஏற்றுக்கொண்ட மருத்துவர்கள், டீன்ஏஜ் பருவத்தில் கருத்தரித்தலை தவிர்ப்பது, கருத்தடை முறைகளை ஊக்குவிப்பது, குறைவான இடைவெளிகளில் கருத்தரிப்பதை தவிர்ப்பது மற்றும் 20-21 வயதுக்கு முன்பு இளவயதிலேயே திருமணம் செய்வதை தவிர்ப்பது ஆகியவை கண்டிப்பாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!