
திருப்பரங்குன்றம் அருகில் உள்ள பசுமலை அம்பேத்கர் காலணியை சேர்ந்தவர் லோகராஜ் இவருடைய மனைவி சுப்புலட்சுமி. இவர்களின் வீட்டு வாசல் கதவு முன்பு “எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல” என எழுதப்பட்ட வாசத்திலான பதாகையை தொங்கவிட்டுள்ளனர். இது குறித்து இவர் கூறுகையில் இந்த பதாகையை பார்க்கும் இப்பகுதியை சேர்ந்த பலரும் தாங்களும் இது போன்று வீட்டின் முன்பு எழுதி வைக்க வேண்டும் என கூறுவதுடன். அரசியல் கட்சியினர் பரிசு பொருள்களை வழங்குவதை தவிர்க்கவும் இந்த பதாகை வாய்ப்பாக உள்ளது. ல்வேறு அரசியல் கட்சியினர் அனைவருக்கும் வாக்களிக்கும் அவசியத்தை உணர்த்துவதுடன் எங்கள் வாக்கை நியாமாக செலுத்துவோம் என்பதை சக வாக்காளர்களுக்கு உணர்த்த இந்த பதாகையை வைத்துள்ளதாக கூறினர். பரிசு பொருள், வாக்குக்கு பணம் வாங்கும் வாக்காளர்களுக்கு மத்தியில் இந்த வாசகம் இப்பகுதியில் உள்ள மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்