ஹெல்மெட் அணியவில்லை காருக்கு அபராதம் விதித்த காவல்துறை அதிர்ந்துபோன காரின் உரிமையாளர்.

மதுரை மாவட்டம் பைபாஸ் சாலையை சேர்ந்த ராமநாதன் வாடகை கார் உரிமையாளராக உள்ள மற்றும் இவருக்கு சொந்தமான கார் ஒன்று மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வாகனக் கடன் அடைந்ததற்கான ஹெச்பி ரத்து செய்வதற்காக விண்ணப்பித்துள்ளார் அப்பொழுது உங்கள் வாகனத்திற்கு அபராதம் உள்ளது 100 ரூபாய் கட்டினால் தான் தகுதி சான்றிதழ் தர முடியும் என வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தகவல் தெரிவித்துள்ளார்கள் சரி நூறு ரூபாய் தானே என அவரும் கட்டி விட்டார் பின் அதை சரி பார்த்த பொழுது19/06/20 அன்று ஹெல்மெட் அணியவில்லை என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நாளன்று அந்த வாகனமானது மைசூரில் இருந்ததாக வாகன உரிமையாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார் மதுரையிலேயே அந்த வாகனம் இல்லாத பொழுது ஹெல்மெட் அணியவில்லை என வழக்கு பதிவு செய்து விசித்திரமாக உள்ளது என வாகன உரிமையாளர் கேள்வி எழுப்புகிறார் இதுபோன்று கொரோண தொற்று காலகட்டங்களில் வாகனங்கள் எது இயக்காமல் அப்பொழுது தான் சிறிது சிறிதாக அனுமதிபெற்று வாகனங்களை இயக்கி னோம் இந்த நிலையில் இதுபோன்று எத்தனை வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டிராவல்ஸ் உரிமையாளர்கள் கலக்கத்தில் உள்ளார் இதுபோன்ற இனி வரும் காலங்களில் நடக்காமல் இருக்க காவல் துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உரிமையாளர்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

———————————————————————Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image