வாடிப்பட்டியில் சட்டமன்றதேர்தலையொட்டி துணைஇராணுவம்- போலீஸ் கொடி அணிவகுப்பு.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி,தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6ந்தேதி ஒரேகட்டமாகநடக்கிறது. தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்கும்வகையில்பறக்கும்படை,நிலைகண்காணிப்புக்குழுஅதிகாரிகள்தீவிரமாகசோதனைசெய்துவருகின்றனர். தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்துள்ள துப்பாக்கி ஏந்தியதுணைபடையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதத்தில்அச்சமின்றி வாக்களிக்கவேண்டும் என்று வலியுறுத்தியும்,மதுரை மாவட்டம்வாடிப்பட்டியில் போலீசாருடன்இணைந்துதுணைஇராணுவபடையினரின்கொடிஅணிவகுப்புநடத்தினர்.இந்தஅணிவகுப்பிற்குகூடுதல்மாவட்டபோலீஸ்சூப்பிரண்டு வனிதா தலைமை தாங்கி தொடக்கிவைத்தார்.சமயநல்லுhர்போலீஸ்துணைசூப்பிரண்டு ஆனந்தஆரோக்கிராஜ்,(பயிற்சி)டி.எஸ்.பி.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.போலீஸ்இன்ஸ்பெக்டர் ஸ்ல்வியா ஜாஸ்மின் வரவேற்றார். இந்தஅணிவகுப்பில் போலீஸ்இன்ஸ்பெக்டர்கள்,சப்இன்ஸ்பெக்டர்கள்ஆயுதபடைபோலீசார்கள், துணைராணுவவீரர்கள் கலந்துகொண்டனர். இந்த அணிவகுப்பு ஆரோக்கியஅன்னைதிருத்தலத்தில் தொடங்கிகுலசேகரன்கோட்டைபிரிவு,போடிநாயக்கன்பட்டிபிரிவு, இராமநாயக்கன்பட்டி, பொட்டுலுப்பட்டி, சந்தைபாலம்,லாலாபஜார்,பஸ்நிலையம்,ஜெமினிபூங்கா,பழைபத்திரபதிவுஅலுவலகம்,பழைநீதிமன்றம்,ஆர்.டி.ஓ.ஆபிஸ்,யூனியன்ஆபிஸ்பிரிவுவழியாகபோலீஸ்நிலையம்வந்தடைந்தது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..