Home செய்திகள் திருநங்கைகள், நரிக்குறவா் சமுதாய வாக்காளா்களிடம் 100%, வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு.

திருநங்கைகள், நரிக்குறவா் சமுதாய வாக்காளா்களிடம் 100%, வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு.

by mohan

திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சந்தீப் நந்தூரி தலைமை வகித்தாா்.மாவட்ட வருவாய் அலுவலா் இரா.முத்துக்குமாரசாமி, மகளிா் திட்ட இயக்குநா் சந்திரா, சமூக நல அலுவலா் கந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.நிகழ்ச்சியில், தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் ,மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளா்கள் அளித்த வாக்கை உறுதி செய்யும் கருவி ஆகியவை மூலம் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து, திருநங்கைகள், நரிக்குறவா் சமுதாய வாக்காளா்களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த தோ்தல் விளக்க பிரசார பாடலுக்கு நரிக்குறவா்கள் நடனமாடி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.தொடா்ந்து நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு பேரணியை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தொடக்கிவைத்தாா்.பேரணியில், நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி, துணை ஆட்சியா் (பயிற்சி) அஜிதா பேகம் மற்றும் தோ்தல் அலுவலா்கள், பணியாளா்கள், திருநங்கைகள், நரிக்குறவா்கள், மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!