தமிழகம் முழுவதும்2 3 4 தொகுதிகளில் மை இந்தியா பார்டி வேட்பாளர்களை நிறுத்துகிறது.

தமிழக விவசாயிகளுக்கு 24 மணிநேர இலவசமின்சாரம் தடையில்லாமல் .கல்வி வேலைவாய்ப்பில் முன்னுரிமை ஆட்சியமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட 90 நாட்களில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு மாதம் 4,000 ரூபாயும் 270 நாட்களில் வேலைவாய்ப்பு வழங்காத பட்சத்தில் 7,000 ரூபாய் வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக மை இந்தியா பார்ட்டி தலைவர்: அணில் குமார் ஓஜா மை இந்தியா பார்ட்டி தலைவர்சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த மை இந்தியா பார்ட்டி தேசியத் தலைவர் அனில் குமார் பூஜாவிற்கு மதுரை விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோதுதமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மை இந்தியா பார்த்தி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர் தற்பொழுது வேட்புமனுத்தாக்கல் 460 பேர் வேட்பு மனுத்தாக்கல் வழங்கிய நேர்காணல் நடத்தப்பட்டு பின்னர் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்.தற்போது தமிழகத்தில் எந்த அரசும் மக்களுக்கான அரசு இல்லை மக்களைப் பற்றி எந்தவித அக்கறையும் இல்லை தமிழக முதல்வர் தற்போதுதான் ஏப்ரல் முதல் மும்முனை மின்சாரம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என கூறினார் .ஆனால் அதை தேர்தல் நடத்தை மீறல் என செயல்படுத்த முடியாது.நாங்கள் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் இலவசமாக வழங்குவோம்அதே போல் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க பல்வேறு திட்டங்கள் உள்ளது.. இதில் ஆட்சிக்கு வந்த 90 நாட்களில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு 4,000 ரூபாயும் 270 நாட்கள் வேலைவாய்ப்பு உத்தரவாதம் அளிக்கப்படும்.அப்படி தவறும் பட்சத்தில் மாதம் 7000 ரூபாய் ஊக்கத் தொகையாக வேலையற்றவர்களுக்கு வழங்கப்படும்.50 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த திமுக ,அதிமுக எந்த திட்டமும் செயல் படுத்த வில்லை.மாற்றாக எங்களது மை இந்தியா செயல்திட்டங்கள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் .திராவிட கட்சிகளுக்கு மாற்றாக அரசியல் அனுபவம் இல்லாமல் எப்படி ஜெயிக்க முடியும் என்ற கேள்விக்குஇதற்கு அரசியல் அனுபவம் தேவை இல்லை.மக்களுக்கு தேவையான திட்டங்கள் செயல்பாடுகள் குறித்து அறிக்கைகளை மத்திய மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ளேன் அவற்றைப் பற்றி எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை ஆகையால் நாங்களே நேரடியாக மக்களை சந்திக்க தயாராக உள்ளோம் மக்களுக்கு உழைக்க பல்வேறு திட்டங்கள் எங்களிடம் தயாராக உள்ளது என மை இந்தியா பார்ட்டி தேசியத் தலைவர் அனில் குமார் ஓஜா கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..