இராஜபாளையம் பிஜேபி கட்சி வரைந் துள்ள சின்னத்தை அகற்றாமல் மெத்தனமாக இருந்து வருகின்றனர் .

இராஜபாளையத்தில் கூட்டணி கட்சி இடையே சின்னங்கள் ஒதுக்காத நிலையில் பிஜேபி தாமரை சின்னத்தை வரைந்து தேர்தல் பணியை துவங்கியுள்ளது அதிமுகவினரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளதுவிருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக
பி.ஜே பி .சார்பில்நடிகை கௌதமி நியமித்துள்ளனர் கௌதமி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக இராஜபாளையம் நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார்இராஜபாளையம் மற்றும் கிராமப் பகுதிகளில் அவ்வப்போது மக்களை சந்தித்து மக்களுடைய குறைகளை கேட்டு வந்த நிலையில் தற்போது இராஜபாளையம் அம்பேத்கார் நகர் இராஜபாளையம் ESI காலனி பகுதிகளில் பிஜேபி யின் சின்னமான தாமரை சின்னத்தை வரைந்து தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென சுவர் விளம்பரங்கள் செய்து வருகின்றனர்தேர்தல் அறிவித்துள்ள இந்த நிலையில் இராஜபாளையம் பகுதிகளில் தேர்தல் அதிகாரிகள் பிஜேபி கட்சி வரைந் துள்ள சின்னத்தை அகற்றாமல் மெத்தனமாக இருந்து வருகின்றனர்மேலும் இதுகுறித்து சமூக ஆர்வலர்கள்கூறும் போது அதிமுக பிஜேபி இடையே கூட்டணி உடன்பாடு ஏற்படாத நிலையில் யாருக்கு எந்த தொகுதி என்று இன்னும் முடிவேடுக்காதா நிலையில் பிஜேபியினர் தாமரை சின்னத்தை வரைந்து வருகின்றனர் இது அதிமுகவினர் இடையே மன வருத்தத்தையும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதுஇந்த மாவட்டத்தில் அமைச்சராக இருக்கக்கூடியராஜேந்திர பாலாஜி போட்டியிடுவதாக பேச்சு அடிபட்டு வரும் நிலையில் கௌதமி தான் இராஜபாளையம் சட்டமன்ற வேட்பாளர் என மேலிட பார்வையாளர் சுதாகர் ரெட்டி பேசியுள்ளார்மேலும் செய்தியாளர் சந்திப்பில் மேலிட உத்தரவின் பெயரில் பணிகள் செய்து வருவதாகவும் நடிகை கௌதமியும் தெரிவித்துள்ளார் இது கூட்டணி தர்மத்திற்கு எதிரானது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

செய்தியாளர் வி காளமேகம்

———————————————————————Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image