அனைத்திந்திய செட்டியார்கள் பேரவை மாநில , மண்டல, மாவட்ட , நகர , ஒன்றிய பகுதி , கிளை நிர்வாகிகள் அறிமுக கூட்டம் .

கற்புக்கரசி கண்ணகி மங்களாதேவி கோவில் செல்லும் வழியில் லோயர்கேம்ப் பகுதியில் மணிமண்டபம் சிலை அமைக்க -செட்டியார் பேரவை சார்பில் கோரிக்கைசெட்டியார் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள்எந்தெந்த தொகுதிகள் நிற்கிறார்களோ அந்த தொகுதியில் எங்களுடைய ஆட்கள் வேலை செய்வார்கள் அனைத்திந்திய செட்டியார்கள் பேரவை எந்த கட்சி பாகுபாடும் இல்லாமல் அந்தந்த தொகுதியில் எங்கள் சமூக வேட்பாளர்காக வேலை செய்வோம். – செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவர் புகழேந்திஅனைத்திந்திய செட்டியார்கள் பேரவை மாநில , மண்டல, மாவட்ட , நகர , ஒன்றிய பகுதி , கிளை நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மதுரை பசுமலையில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது.நிகழ்வில் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் விஜயபாஸ்கர் சிறப்புரை ஆற்றினார்.கூட்டத்தில் அனைத்திந்திய செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவர் புகழேந்தி தலைமை வகித்தார்.இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:செட்டியார்கள் சமுதாய மக்களின் கல்விக்கு முக்கியத்துவம் .வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தருவது .சிறு ,குறு வியாபாரிகளின் தொழில் மேம்பாட்டிற்க்கு உதவி செய்தல் . அரசின் சலுகைகளையும், அரசாங்க வேலை வாய்ப்பிற்கான வழி முறைகளை செய்து தருவது .சமூக மக்களுக்கு ஏற்படும் சட்டரீதியான பிரச்சனைகளின் , தீர்வுகாண வழி காட்டுதலை அறிவுறுத்துவது .உலககெங்கும் வாழக் கூடிய செட்டியார்கள் இன மக்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து அவர்களிடையே ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வளர்ப்பது .நமது இனத்தின் குல தெய்வம் கற்புக்கரசி மங்கல தேவி கண்ணகி அம்மனுக்கு கண்ணகி கோட்டம் லேயர்கேம்ப்பில் மணி மண்டபத்துடன் கூடிய அம்மன் சிலை அமைக்க வழிவகை செய்வது போன்ற 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவர் புகழேந்தி கூறுகையில்:அனைத்திந்திய செட்டியார்கள் பேரவை என்ற அமைப்பை உருவாக்கி இந்தியா முழுவதும் உள்ள செட்டியார் இன மக்களை ஒன்றிணைத்து வருகிறோம். கடந்த 8 மாதத்திற்கு முன்பாக இந்த இந்திய செட்டியார்கள் பெற வேண்டிய ஓர் அமைப்பை தொடங்கி. அதிகப்படியான இளைஞர்களைக் கொண்டு முதன்முறையாக எந்த உட்பிரிவும் பாராமல் செட்டியார்கள் ஒற்றுமையை வளர்க்கும் வகையில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் முதல் அறிமுக ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் எங்களுடைய கொள்கையான முக்கிய 15 தீர்மானங்கள் கொண்டு. இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. இதுபோன்ற கூட்டங்கள் வருங்காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடைபெறும் என்பதை இந்த நேரத்தில் உங்களிடம் தெரிவித்துக்கொள்கிறோம். அது மட்டுமின்றி உலகமெங்கும் வாழும் எங்கள் செட்டியார் மக்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு உண்டான உரிமைகளை பெற்றுத் தருவோம் என்று உறுதி ஏற்று இந்த நேரத்தில் நாங்கள் ஒருங்கிணைத்து உள்ளோம். பலதரப்பட்ட எங்கள் செட்டியார் அமைப்புகளின் தலைவர்களும் தோழமை அமைப்புகளும் எங்களுடன் சேர்ந்து ஒற்றுமைக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் எதிர்காலத்தில் எங்களின் ஒற்றுமை ஓங்க வேண்டும் இன்றைய காலகட்டத்தில் செட்டியார் இன மக்களின் உணர்வும் பாரம்பரியமும் எங்கள் குலத்தொழிலும் எங்களால் மீட்டு எடுக்கப்படும் என்று இந்த நேரத்தில் நாங்கள் உறுதிமொழியாக சொல்லிக் கொள்கிறோம். பல குழப்பங்களுக்கு மத்தியில் இட ஒதுக்கீடு அரசாங்கத்தில் பல குழப்பங்கள் என்ற பல்வேறு குழப்பங்களில் இந்த காலகட்டத்தில் எந்த அரசியல் அமைப்பும் சாராமல் ஒருமனதாக சமூக வளர்ச்சிக்காக மட்டுமே இந்த அமைப்பு செயல்பட்டு கொண்டிருக்கிறது. இது மாநிலங்கள் மாவட்டங்கள் தோறும் எங்களுடைய அனைத்திந்திய செட்டியார் பேரவை கருடக் கொடியை ஏற்றி அனைத்து மாவட்ட நிர்வாகிகளை அமைத்து எங்கள் ஒற்றுமையை மேம்படுத்த இந்த நேரத்தில் உறுதிமொழி ஏற்கிறோம்.வருகிற சட்டமன்ற தேர்தலில் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு:இந்த சட்டமன்ற தேர்தலோ எதிர்கால சட்டமன்ற தேர்தலோ எங்கள் நோக்கமல்ல. இன்று எங்கள் நோக்கம் எங்கள் சமுதாய ஒற்றுமை, எங்கள் சமுதாய வளர்ச்சி மட்டும்தான்.நேற்று நடந்த தேசிய செட்டியார் பேரவையில் அதிமுக ஆதரவளிப்போம் என்று எடுக்கப்பட்ட முடிவு தொடர்பான கேள்விக்கு:அது அவருடைய தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம் ஒட்டுமொத்த செட்டியார்களின் கருத்தாக இருக்காது நாங்கள் சமுதாயத்தை வளர்க்கும் வேலையை எங்களுடைய வேலையாக பார்க்கிறோம்.கோரிக்கைகள்குறித்தகேள்விக்கு:எங்களுடைய ஒரே கொள்கை செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள்எந்தெந்த தொகுதிகள் நிற்கிறார்களோ அந்த தொகுதியில் எங்களுடைய ஆட்கள் வேலை செய்வார்கள் அனைத்திந்திய செட்டியார்கள் பேரவையோட எந்த கட்சி பாகுபாடும் இல்லாமல் அந்தந்த தொகுதியில் எங்கள் வேட்பாளர்காக வேலை செய்வோம்.இந்த காலகட்டத்தில் உட்பிரிவுகளோ இல்லை மாற்று சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீடு குறித்து நாங்கள் பேசவில்லை. எங்களுக்குள்ள ஒற்றுமையை நாங்கள் சேர்த்துக் கொண்டே இருக்கிறோம் எங்களுடைய பலத்தை கூட்டிக் கொண்டு நாங்கள் அரசிடம் கோரிக்கை வைப்போம்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..