
வேலூர். பிப்.28 – வேலூர் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்களை மாவட்ட தேர்தல் அலுவலர் சண்முகசுந்தரம் நியமனம் செய்து உள்ளார்.அதன் படி காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு தனித்துணை ஆட்சியர் புண்ணியகோட்டி (சமூக பாதுகாப்பு திட்டம்)வேலூருக்கு வருவாய் கோட்டாட்சியர் கணேஷ்.அணைக்கட்டுக்கு உதவி ஆணையர் (கலால்) வெங்கட்ராமன்கே.வி.குப்பத்துக்கு பானு (மாவட்ட வழங்கல் அலுவலர்)குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு வருவாய் கோட்டாட்சியர் (குடியாத்தம்) சேக்மன்சூர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.