வேலூர் அருகே சாத்தான்குளம் மலைகிராமத்தில் ஆம்புலன்ஸில் குவா! குவா!

வேலூர் மாவட்டம் அனைக்கட்டு தாலுகா, பீஞ்சமந்தையை அடுத்த சாத்தான்குளம் என்ற மலை கிராமத்தில் இருந்து 108 கட்டுப்பாடு அறைக்கு இன்று காலை 9:49மணிக்கு பிரசவ வலி தொடர்பாக அவசர அழைப்பு வந்தது. உடனடியாக பீஞ்சமந்தை அடிவாரம் கீழ்கொத்தூர் பகுதியில் இயங்கும் ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் அளிக்கப்பட்டது இதை அடுத்து மருத்துவ உதவியாளர் சௌமியா மற்றும் ஓட்டுநர் நேதாஜி ஆகியோர் ஆம்புலன்சில் விரைந்தனர். சுமார் 11 மணியளவில் சாத்தான்குளம் சென்றடைந்தார். அதை அடுத்து செல்ல சாலை வசதி இல்லாததால் கற்பிணியான ரோஜாவை(22) (திருமலை என்பவரின் மனைவி) உறவினர்கள் உதவியோடு உடனடியாக அவரை ஆம்புலென்ஸில் ஏற்றிக் கொண்டு வேப்பங்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நோக்கி விரைந்தனர். எழந்தபுதூர் என்ற கிராமத்தை கடந்து செல்லும் வழியில் ரோஜாவிற்கு பிரசவ வலி அதிகரித்து. இதனால் வேறுவழியின்றி மருத்துவ உதவியாளர் சௌமியா பிரசவம் பார்த்தார். 12:32 மணியளவில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்பு தாயும் சேயும் வேப்பங்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். தாயும் குழந்தையும் நலமாக உள்ளார்

———————————————————————Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image