உழைப்பு, முயற்சி, தன்னம்பிக்கை மூன்றும் இருந்தால் எதையும் சாதிக்கலாம்.இன்போசிஸ் அதிகாரி அத்யாஷா நந்தூரி அறிவுரை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஓட்டகுடிசல் பகுதியில் உள்ள ஷாஸம்மாள் வித்யா மந்திர் சிபிஎஸ்இ பள்ளியில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு பள்ளி தலைவர் ஷெரின் குமரன், தாளாளர் லாவண்யா குமரன், முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் பிரியா கருணாநிதி அனைவரும் வரவேற்றுப் பேசினார்.மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி துணைவியார் இன்போசிஸ் நிறுவன மனிதவள மேம்பாட்டு அதிகாரியுமான அத்யாஷா நந்தூரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். ஷாஸம்மாள் பள்ளி நிர்வாகம் சார்பில் சிறந்த பெண்மணிக்கான விருது வழங்கிவைக்கப்பட்டது. விழாவில் அத்யாஷா நந்தூரி பேசியதாவது ; பெண்கள் எப்போதும் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.உழைப்பு, முயற்சி, தன்னம்பிக்கை மூன்றும் இருந்தால் எதையும் சாதிக்கலாம். இன்றைய சமூகத்தில் பெண்கள் தனித்துவத்துடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். குடும்பத்தையும் பணியையும் சரியாக கையாள கற்றுக் கொள்ள வேண்டும். எந்த சூழலிலும் எவ்வளவு பெரிய குடும்பத்தில் இருந்தாலும் குடும்பம் குழந்தைகள் என்று ஒதுங்கி விடாமல் தாங்கள் படித்த படிப்புக்கு ஏதாவது ஒரு பணியை கட்டாயம் செய்ய வேண்டும். மகனோ மகளோ யாராகினும் முக்கியமாக பெண்களை மதிக்கவும். குடும்பத்தில் பரஸ்பர உதவிகள் செய்யவும் ஒவ்வொரு தாயும் தங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து திருவண்ணாமலை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (மகளிர் பாதுகாப்பு) தைரியமான பெண்ணுக்கான விருதும் ,நீட் தேர்வில் வெற்றிபெற்ற அய்யம்பாளையத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஷெரின் முயற்சிக்கான பெண் விருதும், லாவண்யா குமரன், திருவண்ணாமலை பாரத சாரண இயக்க மாவட்ட செயலாளர் பியூலா கரோலின் கோவிட் தொடர்பணி மற்றும் நல்லாசிரியர் விருது பாராட்டியும் விருதுகள் வழங்கி கௌரவித்தனர். மேலும் ஆன்லைன் வகுப்பில் சிறப்பாக பணிபுரிந்த மைக்கு பள்ளி ஆசிரியர்களுக்கு மற்றும் ராணி ,உமா ரவிச்சந்திரன், மீரா பாஸ்கர், சுமித்ரா ஹேமந்த், மேத்தா ஆகியோருக்கு தனிப்பட்ட திறமைக்கான விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வனிதா பேசியதாவது; பெண்கள் எப்போதும் கணவருக்கு பின்னால் நிற்க வேண்டும். ஏனெனில் நமக்கு ஒரு பாதுகாப்பான சூழ்நிலை வேண்டும் என்பதே இதற்கு காரணம் நமக்கு சமூக பொறுப்பு வேண்டும். பொதுவாக வேலை குடும்பம் இரண்டையும் எப்படி பார்க்கிறோம் என்பது மிக முக்கியம். செய்யும் வேலையில் புதிய விஷயத்துக்கு வீட்டில் கண்டிப்பாக தமக்கு ஆதரவு இருக்கும் நமது கனவுகளை சரியாக தேர்வு செய்யவேண்டும் .சமையலறை, கணவரின் கனவு என்று இதற்குப் பின்னால் நமது காலத்தை ஓட்டி விடக்கூடாது .கல்வி ஒன்றால் மட்டுமே அதிகாரம் கையில் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.விழாவில்திருவண்ணாமலை துணை காவல் கண்காணிப்பாளர் கிரன் சுருதி திருவண்ணாமலை சுகாதார இணை இயக்குனர் அஜித்தா மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளி மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.நிகழ்ச்சியின் முடிவில் பள்ளி துணைமுதல்வர் இந்துமதி நன்றி கூறினார்

———————————————————————Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image