தையல் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தையல் தொழிலாளர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர் .

மனிதர்கள் விதவிதமாக நாகரிக டிசைன் டிசைனாக வண்ணமயமாகஉடுத்தும் ஆடைகளுக்கு தையல் தொழிலாளர்கள் முக்கிய அங்கமாக திகழ்கின்றனர்.அந்த வகையில் இன்று தையல் கலைஞர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.அதனைக் கொண்டாடும் வகையில் மதுரை தெற்கு வாசல் பகுதியில் உள்ள தமிழ்நாடு தையற்கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக தலைவர் ஆறுமுகம் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் சுந்தரம் மாநில துணை செயலாளர் ராஜேந்திரன் உட்பட கலைஞர்கள் பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.பின்னர் பேட்டியளித்த மாநிலத் துணைச் செயலாளர் ராஜேந்திரன் கூறுகையில்,தமிழ்நாடு தையல் தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களுக்கு நிலையில் உள்ள குரானா உதவிதொய்வின்றி வழங்க ஆவண செய்ய வேண்டும்,அறுபது வயதைக் கடந்த தையல் நல வாரிய உறுப்பினர்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்,குரானா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு வங்கி மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க வேண்டும்.நலிந்த தையல் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி பசுமை வீடு திட்டத்தின் மூலம் வீடு கட்ட கடன் உதவி செய்ய வேண்டும் ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு கோரிக்கையாக வைக்கிறோம் என்று கூறினார்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..