பட்டாசு ஆலை இடிபாடுகளை அகற்றும் போது வெடி விபத்து…ஜேசிபி வாகன ஓட்டுனர் காயம்…

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள துசைச்சாமிபுரத்தில் கடந்த 13ம் தேதி, கிருஷ்ணசாமி பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலையில், மருந்து அலசும் அறையில் வெடி விபத்து ஏற்பட்டு தொழிலாளி சுரேஷ் என்பவர் படுகாயமடைந்தார். விபத்தால் அந்தக் கட்டிடம் இடிந்து பலத்த சேதமானது. இந்த நிலையில் கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணிகள் நேற்று மாலை நடைபெற்றது. ஜேசிபி இயந்திர வாகனம் மூலம் இடிபாடுகளை அகற்றும் போது, இடிபாடுகளில் இருந்த பட்டாசு மூலப் பொருட்கள் பலத்த சப்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ஜேசிபி வாகன ஓட்டுனர், வடபட்டியைச் சேர்ந்த கணேசன் என்பவர் காயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் கணேசனை மீட்டு சிவகாசி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். விபத்து குறித்து மாரனேரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

———————————————————————Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image