மீக்கடத்துத்திறன் குறித்து ஆய்வு செய்து இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற லியோன் கூப்பர் பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 28, 1930).

லியோன் என் கூப்பர் (Leon N ) பிப்ரவரி 28, 1930ல் நியூயார்க், ஐக்கிய அமெரிக்காவில் பிறந்தார். கூப்பர் 1947 ஆம் ஆண்டில் பிராங்க்ஸ் அறிவியலுக்கான உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். 1951ல் இளங்கலைப் பட்டமும், 1953ல் முதுகலைப் பட்டமும் பெற்றார். 1954ல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். இவர் ஒருவருட காலம் உயர்தர கல்விக்கான நிறுவனத்திலும், இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்திலும் ஓஹியோ பல்கலைக் கழகத்திலும் பனியாற்றினார். பின்பு 1958ல் பிரவுன் பல்கலைக்கழகத்திலும் பணியில் சேர்ந்தார். இவர் தாமஸ் ஜே. வாட்சன் Sr. பிரவுன் பல்கலைக்கழகத்தில் படித்த போது அவருக்கு அறிவியல் பேராசியராய் இருந்தார். மேலும் மூளை மற்றும் நரம்பியல் அமைப்பு நிறுவனத்தின் இயக்குனராகவும் பணியாற்றினார்.1969ல் கூப்பர் காய் அல்லார்ட் என்பவரை மணந்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.கூப்பர் இன்ஸ்டிடுயூட் ஆஃப் அட்வான்ஸ்டு ஸ்டடி மற்றும் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நியூக்ளியர் ஆய்வுக்கான ஐரோப்பியக் கூட்டமைப்பு உட்பட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மேற்கொண்டார். கொலம்பியா பிராட்கேஸ்டிங் சிஸ்டம் என்ற நிறுவனம் தயாரித்த நகைச்சுவைத் திரைப்படமான தி பிக் பேங் தியரியில் இடம்பெற்ற கதாபாத்திரமான ஷெல்டன் கூப்பர், என்ற பாத்திரப் பெயர் இவருடைய நினைவால் பின்னாளில் பெயரிடப்பட்டதாகும். மீக்கடத்துத்திறன் குறித்து ஆய்வு செய்து இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவரும் ஆவார். இவருடன் நோபல் பரிசினைப் பகிர்ந்து கொண்டவர்கள் ஜான் பார்டீன், ஜான் ராபர்ட் சிறீபர் ஆகியோராவர். மேலும் மீக்கடத்துத் திறன் பற்றிய பி.சி.ஸ் கோட்பாட்டினை விரிவாக்கி சீர் செய்தவர்கள் ஆவார்கள். நரம்பிணைப்புகளின் மீள்தன்மை (பி.சி.எம் ஆய்வு) குறித்த ஆய்வு இவரது பெயரால் கூப்பர் ஜோடி ஆய்வு என அழைக்கப்படுகிறது. Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி

புனித ரமலான் வாழ்த்துக்கள்..