Home செய்திகள் தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் மாதிரி நன்னடத்தை விதிகள்தொடர்பான ராமநாதபுரம் செய்தியாளர்கள் சந்திப்பு.

தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் மாதிரி நன்னடத்தை விதிகள்தொடர்பான ராமநாதபுரம் செய்தியாளர்கள் சந்திப்பு.

by mohan

மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ்ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.இந்திய தேர்தல் ஆணையத்தின் சட்டமன்ற பொதுத் தேர்தல்-2021 தொடர்பான அறிவிப்பைதொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (27.02.2021) மாவட்டதேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் நன்னடத்தை விதிகள்நடைமுறைபடுத்துதல்தொடர்பானசெய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், மாவட்ட வருவாய்அலுவலர் சிவகாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான செய்தியாளர்களிடம்தெரிவித்ததாவது:இந்திய தேர்தல் ஆணையத்தின் சட்டமன்ற பொதுத் தேர்தல்-2021 தொடர்பானஅறிவிப்பின்படி, வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாள் 12.03.2021, வேட்புமனு தாக்கல் நிறைவு நாள் 19.03.2021, வேட்புமனு பரீசீலனை 20.03.2021, வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் 22.03.2021,வாக்குப்பதிவு நாள் 06.04.2021, வாக்கு எண்ணிக்கை நாள் 02.05.2021 ஆகும். ராமநாதபுரம்மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வாக்காளர் சுருக்கத் திருத்தம்-2021அடிப்படையிலான இறுதி வாக்காளர் பட்டியல் 20.01.2021 அன்று வெளியிடப்பட்டது. 5,76,343 ஆண்வாக்காளர்களும், 5,81,132 பெண் வாக்காளர்களும், 65 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என 11,57,540 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் 3,276 வாக்குச் செலுத்தும் இயந்திரங்கள், 2,160 வாக்குப்பதிவுஇயந்திரங்கள், 2,302 வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகித தணிக்கை இயந்திரங்கள், முதல் நிலை சரிபார்த்தல் நடத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன.நாடாளுமன்றத் தேர்தல்-2019 போது மாவட்டத்தில் 1,369 வாக்குச்சாவடி மையங்கள்ஏற்படுத்தப்பட்டிருந்தன. தற்போது கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள்ன்படி 1,050வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி வீதம் கூடுதலாக 278 வாக்குச்சாவடி மையங்கள்ஏற்படுத்தப்பட்டு 1,647 அமைக்கப்படவுள்ளன.மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், இந்தியதேர்தல் ஆணையம் வரையறுத்துள்ள நடைமுறைகளை முறையாக பின்பற்ற அனைத்து அரசியல்கட்சி பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் உள்ளதலைவர்களின் புகைப்படங்கள், மற்றும் அரசுத் திட்டங்கள் தொடர்பான விளம்பரங்களைஅகற்றவும் அரசு கட்டடங்கள், சாலை மேம்பாலங்கள், பொது இடங்களில் ஏற்கனவே எழுதப்பட்டுடுள்ள விளம்பரங்களை அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதே போல, அரசியல் கட்சி கொடி கம்பங்கள் பாதுகாப்பான முறையில் அகற்ற சம்பந்தப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. புதிய திட்டப்பணிகள் செயல்படுத்துதல், நிர்வாக அனுமதி வழங்குதல், ஒப்பந்தப்புள்ளி கோருதல் போன்றநடவடிக்கைகள் மேற்கொள்ளக் கூடாது என அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுரைவழங்கப்பட்டுள்ளது.அந்த வகையில், இந்திய தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ள விதிமுறைகளின் படி, அனைத்துதேர்தல் நடவடிக்கைகளும் நடுநிலையாகவும், வெளிப்படையாகவும் மேற்கொள்ளப்படும் என மாவட்டதேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்தெரிவித்தார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!