உசிலம்பட்டி தேவர்சிலை வளாகத்தில் திறக்கப்பட்ட அரை மணி நேரத்தில் எதிர்ப்பு கிளம்பியதால் மூக்கையாத்தேவர் சிலை மூடப்பட்;டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் கட்சி மூத்த தலைவருமான பிகே மூக்கையாத்தேவருக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த செலவில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பேருந்து நிலையம் முன்பு உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை வளாகத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு,பணிகள் தற்போது நிறைவு பெற்று மூக்கையாதேவர் வெண்கல சிலையும் நிறுவப்பட்டு சாக்கால் மூடப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.ஆனால் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில் மூடிவைத்திருந்த மூக்கையாத்தேவர் சிலையை தமிழக முதல்வரும்,துணை முதல்வரும் காணொலி காட்சி மூலம் திறந்து வைப்பதாக வாட்ஸ்அப்பில் அதிமுகவினர் தகவல் பரப்பியதால் தேவர்சிலை வளாகத்தில் அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் அங்கு திரண்டனர். இந்நிலையில் சிலையை திறப்பதற்காக குழாய் மூலம் தண்ணீரை கொண்டு கழுவி தயாராக வைத்திருந்தனர்.அப்போது தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்ததாகக் கூறி சிலையை திறந்தனர்.

சில நிமிடங்களில் அங்கு திரண்ட சீர்மரபினர் நலசங்க நிர்வாகிகள் சிலையை திறக்க கூடாது எனவும், டிஎன்டி சான்றிதழ் முழுமையாக வழங்கிய பின் சிலையயை திறக்குமாறும்,ஓபிஎஸ் ஒழிக எனவும் கோஷங்களை எழுப்பியவாறு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைதொடர்ந்து அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்தி நிறுத்தி அங்கிருந்து விரட்டியடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. மேலும் பார்வர்ட் கட்சி நிர்வாகிகள் சிலர் தங்கள் கட்சி கொடிகளுடன் சிலைக்கு பின்னால் கொடியை நட முயன்றதால் அவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து சர்ச்சையும், எதிர்ப்பும் கிளம்பியதால் சிலை திறந்த அரை மணி நேரத்தில் சாக்குப்பையால் மூடப்பட்டன. இதனால் மூக்கையாத்தேவருக்கு அணிவிக்க மாலை வாங்கி வந்த அனைவரும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு சென்றனர்.சமூக வலைத்தளங்களில் சிலை திறப்பது பற்றிய செய்தி கேள்விப்பட்டு அங்கு வந்த பலர் மூடப்பட்ட சிலையைப் பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

உசிலை சிந்தனியா

———————————————————————Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image