சாத்தனூர் அணையின் பிக்கப் அணை விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் அணையின் பிக்கப் அணைக்கட்டிலிருந்து விவசாய பாசனத்திற்காக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைப்படி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திறந்து வைத்தார்சாத்தனூர் அணையின் முழு நீர்மட்டம் 119 அடியாகும் இதில் சாத்தனூர் அணையில் நீர்த்தேக்கத்தின் முழு கொள்ளளவு தற்போது 111.65 அடியாக இருந்து வருகிறதுதிருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை சுற்றியுள்ள கிராமங்களில் பாசன வசதி பெறும் சுமார் 33 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு இடது மற்றும் வலது புற கால்வாய்களில் வினாடிக்கு 220 கன அடி மற்றும் 200 கன அடியாக மொத்தம் 480 கன அடி வீதம் 25.02.2021 முதல் 26.05.2021 வரை சுமார் 90 நாட்களுக்கு இடைவெளி விட்டு வழங்கப்படும் எனவும் இதனை தொடர்ந்து திருக்கோவிலூர் அணைக்கட்டு பழைய ஆயக்கட்டு சுமார் 5000 ஏக்கர் இரண்டாம் போக சாகுபடிக்கு ஆயிரத்து 200 மில்லியன் கன அடி நீர் அணை நீர் பங்கீடு விதியின்படி 09.03.2021 முதல் 28.0.2021 வரை இடைவெளி விட்டு விவசாயிகளின் கோரிக்கையின் அடிப்படையில் மூன்று தவணைகளாக சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது திறந்துவிடப்பட்ட தண்ணீரை சிக்கனமாக சிறந்த முறையில் பயன்படுத்தி நல்ல விளைச்சல் பெற்றிட விவசாயிகள் ஒத்துழைக்குமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார் மேலும் திறந்துவிடபடுகின்ற தண்ணீரானது சுமார் 90 நாட்கள் மட்டுமே திறந்து விடப்படும் எனவும் மேலும் தண்ணீர் திறக்க எவ்வித வாய்ப்புகளும் இல்லை எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார் இந்நிகழ்சியில் திருவண்ணாமலை மாவட்ட செயற்பொறியாளர் மகேந்திரன் உதவி செயற்பொறியாளர் அறிவழகன் உதவி பொறியாளர் செல்வராஜ் மதுசூதனன் ராஜேஷ் மற்றும் விவசாய சங்கத்தினர் கலந்துகொண்டனர்.

———————————————————————Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image