
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள குப்பநத்தம் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைப்படி திருவண்ணாமலை மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மகேந்திரன் குப்பநத்தம் அணையை திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் செங்கம் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் ராஜாராமன் சக்திவேல் செங்கம் வட்டாட்சியர் மனோகரன் ஆகியோர் கலந்துகொண்டு மலர்தூவி நாளையிலிருந்து நீரை வரவேற்றனர்இந்த குப்பநத்தம் அணையில் சுமார் 52 அடி தண்ணீர் இருந்து வருவதால் அணையிலிருந்து நாளொன்றுக்கு 280 கன அடி வீதம் சுமார் 20 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது திறக்கப்பட்ட தண்ணீர் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகள் பாசன வசதி பெறும் இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும் வகையில் இந்த அணை திறந்து விடப்பட்டதுஅனை திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கால்நடைகள் ஆற்று பக்கம் செல்ல வேண்டாம் என தண்டோரா மூலம் செங்கம் செய்யாறு ஒட்டியுள்ள கிராமங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டதுவிவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 20 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதல்வருக்கும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு விவசாயிகளும் பொதுமக்களும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்