மழலை இதயம் காப்போம்அறக்கட்டளை சார்பாக விழிப்புணர்வு பேரணி

பிறக்கும் குழந்தைகளில் ஒரு சிலருக்கு ரத்த நாளத்தில் அடைப்பு வாழ்வு சுருக்கம் பிறவி இதயக் குறைபாடு ஏற்படுகிறது.அந்த வகையில் புதிதாய் பிறக்கும் நூறு குழந்தைகளில் ஒருகுழந்தை பிறவி குறைபாடுகளுடன் பிறப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.அந்த வகையில் பிறவி குறைபாடுகளை பற்றி கண்டறியும் வகையில் அதைச் சரிசெய்யும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும்மதுரை தெப்பக் குளத்தில் உள்ள மழலை இதயம் காப்போம்அறக்கட்டளை சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.மழலை இதயம் காப்பகம் தலைவர் மருத்துவர் கோபி நல்லையன்தலைமையில் பள்ளி மாணவ மாணவிகள் கல்லூரி மாணவ மாணவிகள் பிறவிகுறைபாடுகள்பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்பதாகைகளை ஏந்தியபடி தெப்பக்குளம் மற்றும் ஞானவேல் காலனி சுற்றியுள்ள பகுதிகளில் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பின்னர் இதுகுறித்து கூறிய தலைவர் மருத்துவர் கோபி நல்லையன்,

பிறக்கும் பொழுது குழந்தையின் இதயத்தில் ஏற்படும் குறைபாடே பிறவி இதயக் குறைபாடு ஆகும்.இதயத்தில் உள்ள ரத்த நாளத்தில் அடைப்பு மற்றும் இதயச் சுருக்கம்என பல குறைபாடுகள் உள்ளது புதிதாய் பிறக்கும் நூறு குழந்தைகளில் ஒரு குழந்தை பிறவிகுறைபாடுகளோடு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.அந்தப் பிறவி குறைபாடுகளை பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மூலம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

———————————————————————Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image