
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாளையொட்டி, மேல்பெண்ணாத்தூர் அதிமுக பிரமுகர், அரசு ஒப்பந்ததாரர் கே.ஏழுமலை தலைமையில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் இரா.ஜெயந்தி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நிகழ்விற்கு செங்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் அருணாச்சலம் அமுதா மற்றும் மாவட்ட துணை செயலாளர் அமுதா அருணாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், ஊராட்சி செயலர் கந்தன் ஒன்றிய, கவுன்சிலர் முருகன், மேலமைப்பு பிரதிநிதி ஏழுமலை ,சின்னராஜி, அண்ணாமலை, உத்திரகுமார் , ஏழுமலை உட்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர் .நிகழ்ச்சியின் முடிவில் பள்ளி ஆசிரியர் வேல்முருகன் நன்றி கூறினார்.