இராமநாதபுரம் மாவட்டம் மாயாகுளம் ஜாமியா மஸ்ஜித் நிர்வாகக் கமிட்டியின் புதிய நிர்வாகிகள் தேர்வு..

இராமநாதபுரம் மாவட்டம் மாயாகுளம் ஜாமியா மஸ்ஜித் நிர்வாகக் கமிட்டியின் பதவிகாலம் முடிவடைந்ததால் தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் கீழ் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க அறிவிப்பு செய்யப்பட்டு 12/2/21 மற்றும் 19/2/21 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் பொது அறிவிப்பு செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில்  வக்ப் வாரிய கண்காணிப்பாளர் R.அன்வர்தீன், வக்ப் ஆய்வாளர் S செய்யது ஆலம் இப்ராகிம் ஆகியோர் முன்னிலையில் கீழக்கரை சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் முருகேசன் ஏர்வாடி தர்கா காவல் ஆய்வாளர் சண்முகநாதன் ஆகியோரின் மேற்பார்வையில் 22/02/21 அன்று வக்ப் சட்டத்தின் அடிப்படையில் ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெற்றது.

இந்த நிர்வாக தேர்வில் NM அப்துல் ரகுமான் தலைமையில் ஒரு அணியும், ASS அப்துல் காலிக் தலைமையில் ஒரு அணியும் தேர்தலை சந்தித்தனர்.  இத்தேர்தலுக்கு முன்னர் வக்ப் வாரிய கண்காணிப்பாளர் வக்ப் சட்டங்களை எடுத்துக்கூறி தேர்தலை சிறப்பாக நடத்தினார்.

இதில் 112 வாக்குகளுடன் ASS அப்துல் காலிக் தலைமையிலான அணியினர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. NM அப்துல் ரகுமான் அணியினர் 60 வாக்குகள் பெற்றனர். இதில் கீழ்கண்ட நபர்கள் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர்:- ASS அப்துல் காலிக்
துணைத்தலைவர்:-  மெளலவி S.அன்வர்தீன் அன்வார் செயலாளர்:-  J.அப்துல் கரீம்
துணைச்செயலாளர்:-  H.அல்அமீன்

பொருளாளர் :-  M.முகம்மது யூசுப் சாஹிப்

கமிட்டி உறுப்பினர்களாக…
S.முகம்மது அலியார்
PM.சாகுல் ஹமீது
அப்துல் ரசாக்
M.நூருல் அமீன்
சாகுல் ஹமீது
S.அய்யூப் கான்
K.செய்யது அகமது கபீர்

ஆகியோர் அடங்கிய அணியினர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. வெற்றிபெற்ற இந்த நிர்வாக கமிடியின் பதவிகாலம் மூன்று ஆண்டுகளாகும்.

———————————————————————Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image