மத்திய அரசின் விருது பெற்ற வினைதீர்த்த நாடார் பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் பாராட்டு விழா..

தென்காசி கல்வி மாவட்டத்தில் (2018-19) கல்வி ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட தென்காசி மாவட்டம் திப்பணம்பட்டி ஊராட்சியில் உள்ள வினை தீர்த்த நாடார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் “பெற்றோர்-ஆசிரியர் கழகத்திற்கு ஊக்கத் தொகை ரூ.50000 தமிழக அரசு சமீபத்தில் வழங்கி பள்ளியை பெருமைப்படுத்தியது. இந்தப் பெருமையை பாராட்டும் விதமாகவும், 2020-21 ம் கல்வி ஆண்டில் இந்தப் பள்ளியில் பயிலும் 10ம் வகுப்பு மாணவன் அ. கார்த்திக் புதியவன் என்ற மாணவனுக்கு மத்திய அரசின் கீழ் செயல்படும் ” அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையால்” வழங்கப்படுக்கூடிய “இன்ஸ்பயர் விருது” (Inspire Award) ரூ.10000 கிடைக்கப்பெற்றது. பள்ளிக்குப் பெருமை சேர்த்த இந்த மாணவனை பாராட்டியும் பாராட்டு விழா நடைபெற்றது. பாராட்டு விழாவில், பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கும், “இன்ஸ்பயர் விருது” பெற்ற மாணவனுக்கும் ஊர் பொதுமக்கள் சார்பாக பாராட்டு சான்றிதழ் மற்றும் சிறப்பு பரிசு வழங்கினர். பாராட்டு விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் நல்லாசிரியர் ஓய்வு மதனசிங் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகர் வரவேற்றார். கீழப்பாவூர் முன்னாள் ஒன்றிய சேர்மன் குணம், ஊர் பெரியவர் தங்கப்பழம், ஆனந்தன், சக்திவேல் மற்றும் விஜயன் முன்னிலை வகித்து, பெற்றோர்-ஆசிரியர் கழகத்தையும், ஆசிரியர்களையும், இன்ஸ்பயர் விருது பெற்ற மாணவனையும் பாராட்டி பேசினர். தமிழாசிரியர் சங்கரநாராயணன் நன்றியுரை வழங்கினார். தங்கராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை தளிர் பசுமை அமைப்பு நிர்வாகிகள் வேல்முருகன் மற்றும் சதீஷ் செய்திருந்தனர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

———————————————————————Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image