Home செய்திகள் MBC பட்டியலிலுள்ள சிறு குறு சாதியினரை இணைத்து MMBC என அறிவிக்க வேண்டும்”

MBC பட்டியலிலுள்ள சிறு குறு சாதியினரை இணைத்து MMBC என அறிவிக்க வேண்டும்”

by mohan

MBC பட்டியலிலுள்ள சிறு குறு சாதியினரை இணைத்து MMBC என அறிவிக்க வேண்டும்”மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள சிறு குறு சமூகங்களை இணைத்து மிக மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலாக அறிவித்து இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என MBC பட்டியலில் உள்ள சிறுகுறு சமூக மக்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் மணி பாபா கோரிக்கை.மதுரை கேகே நகரில் உள்ள சோகோ அறக்கட்டளை வளாகத்தில் தமிழ்நாடு MBC பட்டியலில் உள்ள சிறு-குறு சமூக மக்கள் கூட்டமைப்பின் சார்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதன் மாநிலத் தலைவர் மணி பாபா செய்தியாளர்களிடம் பேசியபோது,தமிழ்நாடு முழுவதும் இன்று இட ஒதுக்கீடு கேட்டு பிற்படுத்தப்பட்டோர் (BC) பட்டியலில் உள்ள கோனார் (யாதவர்), நாடார்,செட்டியார், பிள்ளைமார்கள், அகமுடையார், மறவர், கள்ளர் சமூகங்கள்போராடி வருகிறார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) பட்டியலில் உள்ள வன்னியர் சமூக மக்களுக்கு தனியாக 20% சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு வன்னியர் சங்கமும், திரு. ராமதாஸ் அவர்கள் தலைமையில் இயங்கும்பாட்டாளி மக்கள் கட்சியும் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்துவருகிறார்கள். மேலும் MBC பட்டியலில் உள்ள வலையர், பிரமலைக்கள்ளர்,மறவர் இட ஒதுக்கிடு கேட்டும் போராடி வருகிறார்கள். இந்த நிலையில்தமிழகத்தில் புறக்கணிக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு மிகவும் (MBC)பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள சிறுகுறு சமூகங்களான வண்ணார்,மருத்துவர் (நாவிதர்), குலாளர், இசை வெள்ளாளர், ஆண்டிபண்டாரம்,யோகிஸ்வரர், ஒட்டர், போயர் போன்ற சமூகங்கள் 20% சதவீதம் மக்கள்வாழ்ந்து வருகிறார்கள்.ஆதிகாலத்திலிருந்து சலவைத் தொழிலும் துணி தேய்க்கும் தொழிலும் செய்து வரும் வண்ணார் சமூக மக்கள், முடி திருத்தும் தொழில் செய்து வரும் மருத்துவர் (நாவிதர்) சமூகம் மண்பாண்டம் தொழில் செய்து வரும் குலாளர் சமூகம், கல் உடைக்கும் தொழில் செய்து வரும் ஒட்டர், போயர் சமூகம், கோயில்களில் நாதஸ்வரம் வாசிக்கும் இசை வெள்ளாளர், கிராமகோவில் பூசாரி மற்றும் பூக்கட்டும் தொழில் செய்து வரும் ஆண்டிபண்டாரம்,யோகீஸ்வரர் சமூகங்கள் MBC பட்டியலிலிருந்து கல்வி, வேலை வாயப்பு,பொருளாதாரத்தில் முழுமையாக இட ஒதுக்கீடு பெற முடியாமல் MBCபட்டியலில் இருந்து வருகிறார்கள்.தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு ST பழங்குடியினர் 1%, SCதாழ்த்தப்பட்டோர் 18%, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) 20%,பிற்படுத்தப்பட்டோர் (BC) பட்டியலில் 30% மொத்தம் 69% இட ஒதுக்கீடுவழங்கி வருகிறார்கள்.MBC பட்டியலில் உள்ள வன்னியர் சமூகம் தனியாக 20% இடஒதுக்கீடு கேட்டு போராடி வருகிறார்கள். மேலும் MBC பட்டியலில் உள்ள வலையர்கள், மறவர், பிரமலை கள்ளர்கள் போராடி வருகிற சூழலில் அதேMBC பட்டியலில் சிறு சமூகங்களான வண்ணார், மருத்துவர் (நாவிதர்)குலாளர், இசை வெள்ளாளர், ஆண்டி பண்டாரம், யோகீஸ்வரர், ஒட்டர், போயர்போன்ற சமூகங்களும் முழுமையாக இட ஒதுக்கீடு பெற முடியவில்லை.ஆனால், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் (BC) பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை ஐந்தாக A, B, C, D, E என பிரித்துஇடஒதுக்கீடு வழங்கி வருவதை போல, கர்நாடகா மாநிலத்தில்பிற்படுத்தப்பட்டோர் (BC) பட்டியலை ஐந்தாக பிரிந்து, மிக மிகபிற்படுத்தப்பட்டோர்-I, ஓரளவு பிற்படுத்தப்பட்டோர்-II, மிகவும்பிற்படுத்தப்பட்டோர்-III, பிற்படுத்தப்பட்டோர்-IV ஓரளவு பிற்படுத்தப்பட்டோர்-V என்று பிரித்து இட ஒதுக்கீடு வழங்கி வருகிறார்கள். இதுபோன்று தமிழ்நாட்டிலும் BC, MBC பட்டியலை பல பிரிவாக பிரித்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) பட்டியலில் உள்ள வண்ணார் மருத்துவர் (நாவிதர்) இசை வெள்ளாளர், குலாளர், ஆண்டிபண்டாரம்,யோகீஸ்வரர், போயர், ஒட்டர் போன்ற சமூகங்களை இணைத்துதனியாக 10% இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்துகிறோம்.வண்ணார், மருத்துவர் (நாவிதர்), இசை வெள்ளாளர், குலாளர், ஆண்டி பண்டாரம், யோகீஸ்வரர், போயர், ஒட்டர் போன்ற சிறு சமூகங்களுடன் இன்னும் உள்ள குறு சமூகங்களை இணைத்து(MNBC – Most Most Backward Class) மிக மிக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை உருவாக்க வலியுறுத்துகிறோம்.சட்டநாதன் ஆணையம், அம்பாசங்கர் ஆணையம் இந்த சிறுகுறுசமூகங்களுக்கு வெளியிட்ட அனைத்துலுகைகளையும்வழங்கிடவலியுறுத்துகிறோம்.பூக்கட்டும் தொழிலாளர்கள் நல வாரியம், முடி திருத்தும் தொழிலாளர்கள் நல வாரியம், கல் உடைக்கும் தொழிலாளர் நலவாரியம், சலவைத் தொழிலாளர் மற்றும் துணி தேய்க்கும் தொழிலாளர்கள் நல வாரியம், கிராம பூசாரிகள் நல வாரியம் ஆகிய நலவாரியங்கள் அனைத்திலும் அந்தந்த தொழிலாளர்களை நல வாரியதலைவர்களாக நியமிக்க வலியுறுத்துகிறோம். MBC பட்டியலில் உள்ள சிறு குறு சமூகத்தை சேர்ந்தோருக்கு தமிழகசட்டமன்ற தேர்தலில் போட்டியிட அனைத்து கட்சியிலும் வேட்பாளராகஅறிவிக்க வலியுறுத்துகிறோம்.MBC பட்டியலில் உள்ள சிறு குறு சமூக மக்களின் கோரிக்கைகளை அனைத்து கட்சி தேர்தல் அறிக்கையில் இடம் பெற வலியுறுத்துகிறோம்.பெரிய தனியார் நிறுவனங்கள் (கார்பரேட்) சலவைத் தொழிலையும்,முடிதிருத்தும் தொழிலையும் பெரிய அளவில் தொழிற்கூடம் அமைத்துவேலை செய்து வருகிறார்கள். இதுபோல தொழிற்கூடம் துவங்குவதற்குவங்கிகளில் படித்த வண்ணார், நாவிதர் சமூக இளைஞர்களுக்கு 50லட்சம் மானியத்துடன் கடன் வழங்குக.மலர்கள் மூலம் வாசனை திரவியம் (சென்ட் பேக்டரி) தொழிற்கூடம்துவக்குவதற்கு யோகீஸ்வரர் இளைஞர்களுக்கும், கல் குவாரிகளைநடத்துவதற்கு போயர், ஒட்டர், சமூக இளைஞர்களுக்கும் வங்கிகளில்கடன் உதவி வழங்குக.MBC பட்டியலில் உள்ள சிறுகுறு சமூக மக்களான வண்ணார், நாவிதர், ஒட்டர், குலாளர், போயர், யோகீஸ்வரர், ஆண்டி பண்டாரம், இசைவேளாளர் ஆகிய சமூக மக்களுக்கு 2 ஏக்கர் நிலமும், வீடு இல்லாதவர்களுக்கு வீட்டடி மனை பட்டாவும், வீடு கட்டி கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்

. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!