
திருவண்ணாமலை பாரத சாரண இயக்கம் சார்பில் உலக சிந்தனை நாள் விழா கொண்டாடப்பட்டது . திருவண்ணாமலை பாரத சாரண இயக்கம் சார்பில் நடந்த உலக சிந்தனை நாள் விழாவில் முதன்மை கல்வி அலுவலர் ச.அருள்செல்வம் தலைமை தாங்கி பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். பாரத சாரண இயக்க மாவட்ட செயலாளர், தேசிய பயிற்றுனர் பியூலா கரோலின் அனைவரையும் வரவேற்று பேசினார்.மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆணையர் வேத பிரகாசம் ,பள்ளிக்கல்வி துணை ஆய்வாளர் குமார் , முன்னிலை வகித்தார்.
பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் நிர்வாக பொறுப்பில் உள்ள சாரண சாரணிய ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தை ஜே.சி.பி.மூலமாக சுத்தம் செய்து சுமார் 100 மூலிகை மரக்கன்றுக்கள் நடப்பட்டது . நிகழ்வில் மாவட்ட ஆணையர் சாரணியம் ஜோதிலட்சுமி,திரு . தேசிய பயிற்சி ஆணையர் ஸ்ரீனிவாஸவரதன் மாவட்ட அமைப்பு ஆணையர் அருண்குமார் , மாவட்ட பயிற்சி ஆணையர் கலைவாணி மாவட்ட ரோவர் துணை ஆணையர் சுதாகர் .மாவட்ட பொருளாளர் ஆல்வின் அவர்கள் இம்மானுவேல் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். உலக சிந்தனை நாளையொட்டி மரக்கன்றுகளை அண்ணாமலை மெட்ரிக் பள்ளி ரோவர் ரேஞ்சர்ஸ் 30 பேர் கலந்து கொண்டு சிறப்பு சின்னம் சூட்டும் விழாவில் பங்கு கொண்டனர் .ஆன்லைன் பிரவேஷ் ,பிரதம் ,தேர்வுகளில் வெற்றிப்பெற்ற சாரண சாரணிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அண்ணாமலை சாரண ஆசிரியர்கள் சுதா, உமா, பிரேம்குமார். விழா ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்டனர்