Home செய்திகள் ரஜினி மக்கள் மன்ற ஒன்றிய செயலாளர் தனது ஆதரவாளர்கள் 1000 பேருடன் அதிமுகவில் இணைந்தார்.

ரஜினி மக்கள் மன்ற ஒன்றிய செயலாளர் தனது ஆதரவாளர்கள் 1000 பேருடன் அதிமுகவில் இணைந்தார்.

by mohan

நிலக்கோட்டை தொகுதியில் உள்ள செம்பட்டியில் பச்சமலையான் கோட்டை ஊராட்சி மன்றத் தலைவரும், தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரஜினி மக்கள் மன்ற நிலக்கோட்டை ஒன்றிய செயலாளருமான எஸ் ஏ காளிதாஸ் தனது ஆதரவாளர்கள், மற்றும் தி. மு.க. கட்சியினர் உட்பட 1000 பேர் அ.தி.மு.க. வில் இணையும் விழா முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான நத்தம் இரா. விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் அ.தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன், நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தேன்மொழி சேகர், அ.தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, கிழக்கு மாவட்டத் துணைச் செயலாளர் விஜய பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தகவல் தொழில்நுட்ப ஒன்றிய பொறுப்பாளர் குமரேசன் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி. மு.க செயலாளரும் நத்தம் இரா. விசுவநாதன் பேசியதாவது: இன்றைய நடக்கும் கூட்டத்தில் மாற்றுக் கட்சியில் இருந்தும் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமையில் ஆயிரம் பேர் திரண்டு அதிமுகவில் இணைந்து இருக்கும் சம்பவம் மிகப்பெரிய எழுச்சியை திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுக வளர்ந்திருக்கிறது கூட்டத்தின் வாயிலாக தெரிகிறது. இது போன்ற எழுச்சி இங்கு மட்டுமல்ல தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செல்லும் இடங்களிலெல்லாம் அதிமுகவிற்கு மக்களின் எழுச்சி அமோக வரவேற்பையும், மிகப்பெரிய ஆர்ப்பரிப்பும் ஏற்படுத்தி வருகிறார்கள். தமிழக மக்கள் அதிமுகவிற்கு ஆதரவாக இருப்பதால் எதிர்க்கட்சிகளும் மற்றும் சில கட்சிகளும் அதிமுகவிற்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக வலியை கிளப்பி வருகிறார்கள் இது எல்லாம் மக்கள் மத்தியில் எடுபடாது. நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக அனைத்து தொகுதிகளிலும் அதிகளவில் வாக்குகளைப் பெற்று வெற்றி பெறும் என்பதை இந்த கூட்டத்தின் வாயிலாக தெரிகிறது இவ்வாறு பேசினார். இக்கூட்டத்தில் அம்மையநாயக்கனூர் முன்னாள் பேரூராட்சித் தலைவர் தண்டபாணி, நிலக்கோட்டை முன்னாள் பேரூராட்சித் தலைவர் சேகர், மாவட்ட கவுன்சிலர் ராஜா, முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மூர்த்தி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பாலசுப்பிரமணியன், எம். ஜி. ஆர் மன்ற ஒன்றிய துணைச் செயலாளர் முனியப்பன், ஒன்றிய பொறுப்பாளர்கள் ராஜா, ஜேசுராஜ், காட்டு ராஜா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.படவிளக்கம் அதிமுகவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரஜினி மக்கள் மன்ற நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் காளிதாஸ் முன்னாள் அமைச்சரும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான நத்தம் இரா. விசுவநாதன் முன்னிலையில் இணைத்துக் கொண்ட போது எடுத்த படம்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!