பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை பூமிபூஜையுடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

மதுரை மேற்கு தொகுதியில் மட்டும் இரண்டு நியாவிலைக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. முத்துப்பட்டி பழங்காநத்தம் 58 லட்ச ரூபாய் செலவில் சாலைகள் அமைக்கப்பட உள்ளன.கடன் வாங்குவதில் தமிழக அரசு சாதனை படைத்துள்ளது என ஸ்டாலிற் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு,எந்த அரசும் கடன் வாங்காமல் திட்டம் போட முடியாது. ஸ்டாலின் தெரிந்தும், தெரியாமல் பேசுகிறாரா என்று தெரியவில்லை.அரசு தேவையில்லாமல் கடன் வாங்கவில்லை. எந்த அரசும் கடன் வாங்காமல் நடத்த முடியாது. முதலீடு செய்ய வேண்டுமென்றால் கடன் வாங்கித்தான் ஆக வேண்டும்.அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா வாங்கிய கடனை பற்றாக்குறை ஆக்கியது திமுக.ஸ்டாலினை திமுகவை மக்கள் நம்பவில்லை என்பதால் அண்ணா மீது ஆணை என கூறுகிறார். அண்ணா படத்தை திமுக பயன்படுத்தவில்லை. மக்களை ஏமாற்ற ஏதேதோ நாடகம் ஆடுகிறார் ஸ்டாலின்.பயிர்க்கடன் தள்ளுபடியில் அதிமுகவினர் அதிக லாபம் அடைந்துள்ளனர் என கே.என் நேரு குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு,,கூட்டுறவு வங்கிகளில் யார் யார் கடன் பெற்றார்கள் என்ற விவரம் கே.என்.நேரு கேட்டால் கொடுக்கப்படும். தற்போது பயிர்க்கடன் பெற்ற 12 லட்சம் விவசாயிகள் அதிமுகவினரா? விவசாயக்கடன் தள்ளுபடியால் அதிமுகவுக்கு நல்ல பெயர் கிடைத்ததை திமுக விரும்பாமல் அவப்பெயர் ஏற்படுத்துகிறது.11லட்சத்து90ஆயிரத்து 700 விவசாயிகளுக்கு 9ஆயிரத்து 170 கோடிக்கு மேல் பயிர்க்கடன் தள்ளுபடி செய்துள்ளோம். கே.என்.நேருவை நேரடியாக என்னோடு வாதிட சொல்லுங்கள்.திமுக ஆட்சியில் 3715 கோடி விவசாயக்கடன் தள்ளுபடி செய்துவிட்டு 7000 கோடி தள்ளுபடி செய்தோம் என பொய்யான தகவலை திமுகவினர் சுப்புலெட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோர் சொல்கின்றனர்.திமுக ஆட்சியில் திமுக காரர்களுக்கு தான் அதிகளவில் விவசாயக்கடன் தள்ளுபடி செய்தார்கள். மாபெரும் துரோகம் செய்தனர்.அதிமுக ஆட்சியை போல திமுக விவசாயிகளுக்கு ஏதாவது செய்தார்களா?விவசாயக்கடன் தள்ளுபடி குறித்து என்னோடு விவாதிக்க திமுகவில் கே.என். நேரு, எ.வ.வேலு யாரேனும் தயாராக உள்ளார்களா?புதுச்சேரியில் காங்கிரஸ்க்கு திமுக ஆதரவளிக்கவில்லை என்பது குறித்த கேள்விக்கு,இது திமுகவின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. பாஜகவுக்கு சமிக்கை காட்டுகிறது திமுக. நாங்கள் காங்கிரசுக்கு ஆதரவளிக்கவில்லை என தெரிவித்துள்ளனர். நிலையான கொள்கை. எப்போது வேண்டுமானாலும் மாறுவார்கள்.கூட்டணி கட்சிக்கு கொடுத்த நிதியை வெளிப்படையாக சொன்னவர்கள் திமுக.சகாயத்தை வரவேற்கிறேன். அரசியல் கட்சியில் ஊழல் செய்தால் பாவிகள் தான். பாவிகள் அதிகம் உள்ளது திமுகவில் தான். மதுரையில் திமுக தில்லுமுல்லுகளை வெளிக்கொண்டு வந்தவர் சகாயம் எனக்கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s – சமையல் போட்டி..

Masala varieties available in the market from 2nd February 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply