பட்டாசு ஆலை வெடி விபத்தில் தாய் தந்தையை இழந்த சிறுமியின் படிப்புச் செலவுக்கு அமைச்சர் தனது சொந்தப் பணம் ரூ.5 லட்சம் வழங்கினார்.

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தாய் தந்தையை இழந்த நடுசுரங்குடி சேர்ந்த நந்தினி 12 என்ற சிறுமியின் படிப்புச் செலவுக்காக தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தனது சொந்தப் பணம் ரூ 5 லட்சம் வழங்கினார்.விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேஅச்சங்குளம் கிராமத்தில் கடந்த 12ம் தேதி பட்டாசு ஆலை வெடி விபத்து ஏற்பட்டது இந்த வெடி விபத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர்.இதில் நடுசுரங்குடி கிராமத்தை சேர்ந்த 4 பேர் பலியாயினர் இந்நிலையில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த நடுசுரங்குடிய சேர்ந்த பாக்யராஜ், செல்வி தம்பதியினருக்கு ஏழாம் வகுப்பு படிக்கும் 12 வயதான நந்தினி என்ற பெண் குழந்தை உள்ளது. இன்று தாய் தந்தையை இழந்து நிற்கும் நந்தினியை தமிழக பால்வளத் துறை அமைச்சர் நேரில் சென்று ஆறுதல் கூறினார். பின்னர் சிறுமிக்கு தேவையான ஆடைகள் மற்றும் பொருட்களை கொடுத்தார். 12ம் வகுப்பு வரை படிப்பு செலவிற்காக ஆண்டுக்கு 1லட்சம் வீதம் ரூ.5 லட்சம் தனது சொந்த பணத்தை சிறுமியிடம் வழங்கினார்.மேலும் சிறுமியின் மேற்படிப்பு மற்றும் திருமண காலம் வரை தேவையான அனைத்து உதவிகளையும் தானே செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார். மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பட்டாசு வெடி விபத்தில் தாய் தந்தையை இழந்த சிறுமிக்கு தமிழக அரசு கொடுத்த ரூ.6 லட்சத்தை குழந்தையின் வங்கிக் கணக்கில் சேமிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே நான் கூறியபடி இந்த குழந்தையை எனது சொந்த குழந்தையாக நினைத்து அனைத்து உதவிகளும் செய்து கொடுப்பேன் என்று வாக்குறுதி வைத்துள்ளேன். தற்போது இந்த சிலந்தி ஏழாம் வகுப்பு படித்து வருகிறது 12 வரை படிப்பு செலவுக்காக ஆண்டுக்கு 1 லட்சம் வீதம் 5 லட்ச ரூபாயை குழந்தையிடம் கொடுத்துள்ளேன். என்றார் மேலும் பேசிய அமைச்சர் நமது மாவட்டத்தில் பட்டாசு வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் எந்த நிலையில் பாதிக்கப்பட்டாலும் நான் பாரபட்சமின்றி நான் உதவி செய்வேன் என்றார். பட்டாசு ஆலை வெடி விபத்து நிவாரணம் கிடைக்காத யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க செய்வேன் என்றார் இனிமேல் இதுபோன்று பட்டாசு ஆலை வெடி விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார்.

செய்தியாளர் வி காளமேகம்

Hala’s – சமையல் போட்டி..

Masala varieties available in the market from 2nd February 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply