15 ஆண்டுகளுக்கு மேல் குண்டும் குழியுமாக உள்ள ரோடு சரி செய்ய பொது மக்கள் கோரிக்கை .

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாராயணபுரம் கிராமத்திலிருந்து முக அழகிரி தோட்டம் வரை 15 ஆண்டுகளாக ரோடு குண்டும் குழியுமாக உள்ளது இதனால் இப்பகுதியில் செல்லக்கூடிய வாகனங்கள் விபத்துக்குள்ளாகி அடிக்கடி உயிர் பலி ஏற்பட்டு வருவதாகவும் 15 ஆண்டுகளுக்கு முன்னால் போடப்பட்ட தார் சாலையை சரி செய்து தர பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தம் போராட்டம் நடத்தியும் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என இப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்அவ்வப்போது இந்த ரோடை கிராவல் மண் பரப்பி சரி தற்காலிகமாக சரி செய்து வருவதாகவும் தற்போதும் ரோடு போடுவதற்கு கற்கள் குவிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் ரோடு போட்ட பாடு இல்லை எனவும் கூறுகின்றனர்இதுகுறித்து சமூக ஆர்வலர் பால்பாண்டி கூறுகையில் இந்த ரோடு சோழவந்தான் விக்கிரமங்கலம் திருமங்கலம் தொகுதி இணைக்கக்கூடிய ரோடு ஆகும் மதுரையில் இருந்து தேனி செல்லக்கூடிய ரோட்டில் போக்குவரத்து தடை ஏற்பட்டால் இப்பகுதியில்தான் வாகனங்கள் செல்கின்றன 15 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த ரோடு போடப்பட்டு தற்போது குண்டும் குழியுமாக இருப்பதால் உடனே தார்சாலை அமைத்து தர வேண்டும் என போராட்டம் அறிவித்த உடனே ரோட்டில் உள்ள பள்ளங்களை கிராவல் மண் மூலம் தற்காலிகமாக சரிசெய்வார்கள் ஆனால் நிரந்தரமான ரோடு போடுவதில்லை இதனால் பகலில் கூட வாகனத்தில் வருபவர்கள் பள்ளத்தில் செல்லாமல் மேடான பகுதியில் செல்லும்போது எதிரே வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் பலர் படுகாயமடைந்துள்ளனர் மேலும் மழை காலங்களில் மிகவும் மோசமாக இந்த ரோடு இருக்கும் தற்போது இரவு நேரங்களில் பள்ளங்களில் வாகனங்கள் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர் இதை சாதகமாக கொண்டு சமூக விரோதிகள் வழிப்பறியில் ஈடுபடுகின்றனர் காவல் துறையினருக்கும் பலமுறை இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் சொல்லியும் அதிகாரிகள் செவி சாய்த்த பாடில்லைமேலும் நெடுஞ்சாலைத் துறையும் வனத் துறையும் வேறு வேறு அரசாங்கம் போல் செயல்படுகின்றனர் தார் சாலை அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை தொடங்கினால் வனத்துறை வந்து தடுப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் ஆகையால் உடனடியாக மாவட்ட ஆட்சித்தலைவர் இந்த தார் சாலையை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர் காலதாமதம் ஏற்படும்பட்சத்தில் பொது மக்களை ஒன்று திரட்டி போராட போவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s – சமையல் போட்டி..

Masala varieties available in the market from 2nd February 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply