ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளர்கள் பணிக்கு 3 இடங்களுக்கு 930 பேருக்கு அழைப்பு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள இளைஞர்கள் ஆர்வம்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரிய 3 அலுவலக உதவியாளர்கள் பணிகள் காலியாக உள்ளது . இந்த காலியிடத்தை நிரப்ப ஊராட்சி ஒன்றிய அலுவலக ஆணையாளர் லாரன்ஸ் கடந்த மாதம் இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆகியோர்களிடம் இருந்து 1103 மனுக்கள் பெறப்பட்டது. அவ்வாறு பெறப்பட்ட மனுக்களில் வெளிமாவட்டங்களில் இருந்து மனு செய்திருந்த 173 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 930 பேருக்கு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 9 மணி முதல் இளைஞர்கள் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கு பட்டதாரிகள் ஆண்கள், பெண்கள் உள்பட பலர் ஏராளமானவர்கள் காத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ரெஜினா நாயகம் தலைமையில் நேர்முகத்தேர்வு நடைபெற்றது. ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் யாகப்பன், ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் நியமன குழு உறுப்பினர் நல்லதம்பி ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் லாரன்ஸ் ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அலுவலக உதவியாளர் வேலைக்கு மனு செய்திருந்த அனைவரிடமும் சான்றிதழ்கள் மற்றும் நேர்முகத்தேர்வில் இன்று தொழில் மற்றும் இருப்பிடம் வருமானம் குறித்து பல்வேறு சான்றிதழ்களை சரிபார்த்து வாங்கினார்கள். 3 காலி இடத்திற்கு 930 பேர் மனு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.படவிளக்கம்: நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளர்கள் வேலை வேண்டி மனு செய்தவர்களிடம் நேர்முகத்தேர்வு நடந்த போது எடுத்த படம்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..