இரண்டு பெண்களை அனுப்பி புதுச்சேரி மாநிலத்தை சீரழிப்பது என முடிவு செய்துள்ளார் இதையும் கண்டிக்கக் கூடிய விஷயம். கே.எஸ்.அழகிரி ஆவேசம்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி மதுரை விமான நிலையம் வந்தடைந்துள்ளார். தற்போது செய்தியாளர்களை சந்தித்து கொண்டிருக்கிறார்.இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பின்னால் இவ்வளவு விலை ஏற்றம் என்பது அடைந்ததே கிடையாது மன்மோகன் சிங் இந்தியப் பிரதமராக இருந்த பொழுது கச்சா எண்ணெயின் விலை 108 டாலர் விற்ற போது கூட 70 ரூபாய் மட்டுமே பெட்ரோல் விற்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு கச்சா எண்ணெய் விலை 56 அறிவிக்கப்படுகிறது மோடி அவர்கள் நூறு ரூபாய்க்கு விற்பனை செய்கிறார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறது மத்திய அரசு.மன்மோகன் சிங்கிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும் மத்திய அரசு அப்படி செய்யாமல் மத்திய அரசு ஏதேதோ பேசி வருகிறது இதனால் பொருளாதார நிலை மிகவும் மந்தப்படும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை.அனைத்து கிராமங்களிலும் இரண்டு சக்கர வாகனங்கள் என்பது இருந்துகொண்டிருக்கிறது பெட்ரோல் விலையும் உயரும் காரணமாக இந்திய பொருளாதாரம் பாதிக்கும் நாங்கள் கண்ணீர் விட்டு சொல்கிறோம் இந்த தேசத்தை சிறிய சிறிய சிதைத்து வருகிறது மோடி அரசாங்கம்.தெருவில் அழிவுக்கு பின்னர் எத்தனை தொகுதிகள் எங்களுக்கு வேண்டும் என்பதை எங்களது செயற்குழு கூட்டத்தை கூட்டி தீர்மானத்தை நிறைவேற்றி திமுக தலைமையிடம் கேட்டுப் பெறுவோம்.பாண்டிச்சேரியில் மீண்டும் மோடி அரசாங்கம் தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாராயணசாமி அரசை செயல்படுத்த விடாமல் செய்வதற்காக தன் படையை அனுப்பினார் மோடி தற்சமயம் இந்த அரசாங்கத்தை சீரழிக்கும் விடுவதற்காக தமிழிசையை அனுப்பி வைத்துள்ளார்.இரண்டு பெண்களை அனுப்பி புதுச்சேரி மாநிலத்தை சீரழிப்பது என முடிவு செய்துள்ளார் இதையும் கண்டிக்கக் கூடிய விஷயம்.மாற்றம் கூட அல்ல பதவி நீக்கம் இது எதை சுட்டிக் காட்டுகிறது என்று சொன்னால் மக்களின் கோபத்தை கட்டுப்படுத்துவதற்கான அவரை நீக்கி தற்சமயம் தமிழிசை சௌந்தரராஜன் நியமித்துள்ளார்.தமிழக முதலமைச்சர் அறிவிப்பு என்பது எளிது செயல்படுத்துவது என்பது சிறப்பு தமிழக முதலமைச்சர் இதுவரை எதை செயல்படுத்தி உள்ளார் என்பதை நிரூபியுங்கள்.வேளாண் சட்டத்திருத்த மசோதா தவறானது என்பது விவசாயிகளின் இரண்டு ஆணித்தரமான விஷயங்களை திரும்பத் திரும்ப அவர்கள் சொல்லி வருகிறார்கள் இந்த சட்டம் நிறைவேறிய காரணத்தினால் குறைந்த பட்ச ஆதார விலை என்பது இல்லாமல் போய்விடும் என்று சொல்லப்படுகிறது.எப்பொழுதும் ஒருமித்த கருத்தோடு தான் காங்கிரஸ் கட்சியில் அனைவரும் இருந்து வருகிறார்கள். அவரவர் இருக்கக்கூடிய இடத்தில் பொறுப்புகளை வழங்க கூடிய இடத்தில் பிறரையும் மதித்து நடக்க கூடிய இடத்தில் கொள்கை ரீதியான ஒரு இடத்தில் நடந்து கொண்டிருக்கிற போது அனைத்தும் சரியாகும் எனத் தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..