உசிலம்பட்டி டிஎன்டி சான்றிதழ் முறையாக வழங்க வலியுறுத்தி சீர்மரபினர் நல சங்கத்தினருடன் மாநில விவசாய சங்க தலைவர் அய்யக்கண்ணு உள்ளிட்டோர் திடீர் சாலை மறியல்.

மறவர், கள்ளர், அகமுடையார் உள்ளிட்ட 68 சமுதாயத்தினரை உள்ளடக்கி எம்பிசியிலிருந்து தனியாக பிரித்து டிஎன்டி சான்றிதழ் வழங்கக்கோரி சீர்மரபினர் நலசங்கத்தினர் பல்வேறு பகுதிகளில் பல்வேறு போராட்டங்களை கடந்த ஒரு வருடங்களாக நடத்தி வருகின்றனர். தமிழக முதல்வர்,துணை முதல்வர், அமைச்சர், ஆட்சியர் என அனைவரிடத்திலும் முறையாக டிஎன்டி சான்றிதழ் வழங்க வேண்டுமென கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது.

ஆனால் தமிழக அரசோ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த சீர்மரபினர் நலசங்க நிர்வாகி ஆதிசேடன் தலைமையில் மாநில விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் உசிலம்பட்டி தேவர்சிலை முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக டிஎன்டி சான்றிதழ் முழுமையாக வழங்க வேண்டுமென வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த உசிலம்பட்டி போலீசார் அய்யாகண்ணு உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் சாலை மறியலை கைவிட மறுத்த அய்யாக்கண்ணு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோரை கைது செய்து ஷேர் ஆட்டோவில் ஏற்றி சென்றனர்.இந்த சாலை மறியலால் சுமார் அரை மணிநேரம் உசிலம்பட்டி முக்கிய சாலைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

உசிலை சிந்தனியா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..