திருஞானம் துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு பொம்மலாட்டம் நிகழ்ச்சி மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு.

மதுரை மாவட்டம் திருப்பரங் குன்றத்தை அடுத்துள்ள சிந்தாமணி பகுதியில் திருஞானம் அரசு துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் சரவணன் தலைமையில்1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை குறித்து பொம்மலாட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் குழந்தைகளுக்கு தொடர்ந்து ஏற்படும் பாலியல் வன்கொடுமை, செல்போனால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் அதிலிருந்து எவ்வாறுபாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பன குறித்து விழிப்புணர்வு பொம்பலாட்டம் மூலம் சிறுவர் சிறுமிகளுக்கு செய்து காண்பிக்ப்பட்டது.பின்னர் தலைமையாசிரியர் சரவணன் கூறுகையில்நாள் தோறும் செய்தி மற்றும் தொலைக் காட்சிகளில் தொடர்ந்து குழந்தைகளுக்கான வன்கொடுமை நடைபெற்று வருவதை பார்க்க முடிகிறது.எனவே குழந்தைகள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் இன்னல்கள் பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வு நடத்துவதால் ஆர்வத்துடன் கற்றுக் கொள்வதாகவும் கூறினார்.குழந்தைகளின் பெற்றோரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு இதனை பார்த்தனர்.மேலும் தவறான தொடல், அடுத்த நபர்களி Lம் பாதிப்பது குறித்து விளக்கத்தை புரிந்து கொண்டனர்.தொடர்ந்து புறநகர் பகுதிகளில் 13 இடங்களில் இது போன்று விழிப்புணர்வுகள் நடத்தி வருவதாகவும் குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..