13 ஆவது நாளாக மக்கள் நலப்பணியாளர்கள் காதில் பூ வைத்து நூதன போராட்டம்.

கடந்த 2011 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி அமைந்த பிறகு ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றிய 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து மீண்டும் பணி நியமனம் செய்ய கோரி மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தினர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர் ல்.மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் கடந்த 12 நாட்களாக தினமும் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.இந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக தங்களை மீண்டும் பணி நியமனம் செய்ய வலியுறுத்தி 13 வது நாளாக மக்கள் நலப்பணியாளர்கள் காதில் “பூ” வைத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தின் மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி உடனடியாக பணி நியமனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..