Home செய்திகள் மதுரையில் ஜி கே வாசன் பேட்டி.

மதுரையில் ஜி கே வாசன் பேட்டி.

by mohan

தமாகா அதிமுகவின் கூட்டணியில் முக்கிய அங்கமாக இருக்கிறது அதிமுகவின் வெற்றி வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் மிகப் பிரகாசமாக இருக்கிறது,தமிழகத்திற்கான பல்வேறு நலத்திட்டங்கள் வளர்ச்சிகளை மாநில அரசும் மத்திய அரசும் இணைந்து கொடுத்து தமிழகத்தை தொடர் வளர்ச்சியை உறுதி செய்து கொண்டிருக்கின்றனர்புதிய திட்டங்களை தமிழகத்தின் எதிர்கட்சிகள் சகித்துக் கொள்ள முடியாமல் ஏற்றுக்கொள்ள முடியாமல் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க நிலை இருக்கிறது எதிர்க் கட்சியை பொறுத்தவரை ஆக்கபூர்வமான மக்கள் செயல்பாடுகளில் அவர்கள் ஈடுபடுவது கிடையாது என்று வெளிப்படையாக தெரிகிறது,மக்கள் அவர்களது தவறான செயல் பாடுகளை கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர்,தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று இரண்டாம் கட்ட ரயில் திட்டம் 50 சதவீதம் பங்களிப்பு மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று தாமக வலியுறுத்துகிறதுபிரதமரின் சென்னை வருகை பல கோடி ரூபாய்க்கான புதிய திட்டம் தொடங்கி வைத்தல் என்பது தமிழகத்தினுடைய தொடர் வளர்ச்சிக்கு அறிகுறியாக இருக்கிறது பிற மாநிலத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது தமிழகத்திற்கு மத்திய அரசு அதிக அளவில் திட்டங்களை கொடுத்திருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ் பாடம் அவசியம் அவசரம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதனை தொடர்ந்து வலியுறுத்தும்,மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடிக்க செல்ல கூடிய சுலபமான வழியை அரசு கோட்பாடுகளுடன் இலங்கை அரசோடு பேசி மீனவர்களுக்கு உறுதி அளிக்க வேண்டும்,சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட்ராக் இன்று கடைசி நாள் என்று அறிவித்திருக்கிறார்கள் அல்லது இரு மடங்கு கட்டணம் செலுத்தவேண்டும் என்பதே அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது கடைசி கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்பது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேண்டுகோள்கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷ வாயு காரணமாக மனித இழப்புகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் அந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கொடுக்கக்கூடிய இயந்திரங்களை மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி மட்டுமல்லாமல் கிராமங்களில் அதனை கொடுக்கக் கூடிய நிலையில் அரசு உறுதிப்படுத்த வேண்டும்,விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வரவேண்டும் பலமுறை மத்திய அரசு விவசாயிகளின் நண்பனாக பேச்சுவார்த்தை நடத்தியும் கூட ஒரு சிலருடைய தூண்டுதலின் அடிப்படையில் ஒரு சில மாநிலங்களில் இருக்கின்ற விவசாயிகள் மட்டுமே ஆயிரக்கணக்கில் டெல்லியில் அமர்ந்து கொண்டு இதனை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர் இது முடிவுக்கு வரக்கூடாது அரசுக்கும் நாட்டிற்கும் கேடு விளைவிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் தடை வருகிறது,விவசாயம் வர்க்கம் என்பது இந்தியாவில் ஒரே வர்க்கம்தான் அதற்கு ஒத்த கருத்து ஏற்படுத்தும் நிலையை அரசு விவசாய சங்கங்கள் இணைந்து செயல்படுத்த வேண்டும்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!