செங்கம் பகுதியில் இரண்டு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கோரி சாலை மறியல் போராட்டத்தில் கைது.

செங்கம் பகுதியில் இரண்டு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கோரி சாலை மறியல் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட சுமார் 200க்கும் மேற்பட்டோருக்கு இரவு முதல் இரண்டு வேளை உணவு குடிதண்ணீர் வழங்காமல் பட்டினியோடு வைத்துள்ளதாகவும் உடனடியாக உணவு குடிநீர் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் ஒன்றிணைந்து தமிழகம் முழுவதும் இரண்டு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர் ஆனால் செங்கம் பகுதியில் உள்ள ஊராட்சி அலுவலகத்தில் குடியேற முயன்ற சுமார் 200க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர் அப்போது குடியேறும் போராட்டம் நடத்த அனுமதிக்காததால் ஆத்திரமடைந்த சுமார் 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த காவல்துறையினர் வாகனத்தில் ஏற்ற முயன்றபோது வாகனத்தில் ஏற மறுத்து மாற்றுத்திறனாளிகள் சுமார் 500 மீட்டர் தூரம் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு பேரணியாக நடந்து சென்று கைதாகினர் இருப்பினும் நேற்று மாலை ஒரு வேளை உணவு வழங்கிய அதிகாரிகள் இரவு மற்றும் காலை மதியம் வரை உணவு மற்றும் குடிதண்ணீர் வசதி ஏற்பாடு செய்து தர கால் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் உணவின்றி தவித்து வருவதாகவும் உடனடியாக உணவு ஏற்பாடு செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர் .இதன் அடிப்படையில் காவல்துறையினர் நேற்று கைது செய்து மாலை விடுவித்து விட்டதாகவும் ஆனால் மாற்றுத்திறனாளிகள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்திலேயே போராட்டம் நடத்தி வருவதால் அவர்களுக்கு தொடர்ந்து உணவு வழங்குவதில் சிரமம் ஏற்பட்டு இருக்கிறது அதனைத் தொடர்ந்து செங்கம் வட்டாட்சியர் மனோகரன் தனியார் திருமண மண்டபத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் அப்போது தமிழக அரசு மாத உதவித் தொகை உயர்த்தி தர உங்கள் சார்பில் மனு கொடுத்து விட்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டார் ஆனால் பலமுறை மனு கொடுத்தும் தமிழக அரசு செவிசாய்க்க அதனால் தங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை இத் திருமண மண்டபத்தை விட்டு வெளியேற மாட்டோம் எனவும் வெளியேறினால் செங்கம் ஊராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை தொடரப் போவதாகவும் தெரிவித்தனர் அதன் பிறகு வட்டாட்சியர் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு உங்களது கோரிக்கைகளை தெரியப்படுத்தி விடுவதாக கூறி எதுவும் பேசாமல் சென்று விட்டார் ஆனால் உணவின்றி தவித்து வரும் இவர்களுக்கு உணவு வழங்குவதற்கு எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க முன் வராதது வேதனை அளிப்பதாகவும் மாற்றுத்திறனாளிகள் குற்றம்சாட்டி வருகின்றனர் போராட்டம் ஒரு பக்கம் இருக்க சுமார் 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் எதிர்பார்த்து வருகின்றனர்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..