Home செய்திகள் 30 வருடங்களாக வராத வைகை தண்ணீரை 100 நாள் வேலைத் திட்டத்தின் மூலம் கிராமத்திற்கு கொண்டு வந்து சாதித்த கிராம மக்கள்.

30 வருடங்களாக வராத வைகை தண்ணீரை 100 நாள் வேலைத் திட்டத்தின் மூலம் கிராமத்திற்கு கொண்டு வந்து சாதித்த கிராம மக்கள்.

by mohan

தேசிய ஊரக வேலை அளிப்புத் திட்டம் எனப்படும் 100நாள் வேலைத்திட்டம் கிராமப்பகுதி மக்களை சேம்பேறிகளாக்கும் திட்டம் என கூறப்பட்டு வந்த நிலையில் இத்திட்டத்தின் மூலமும் கிராமத்தை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு சென்று சாதித்துள்ளனர் கிராம மக்கள்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டிப் பகுதியில் உள்ள 33 கண்மாய்கள் பாசனவசதி பெறும் வகையில் 58 கிராம கால்வாய்த்திட்டம் உருவாக்கப்பட்டது.கடந்த 30 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட இத்திட்டம் பலதடைகளைத் தாண்டி ஒருவழியாக கடந்த 2020ம் ஆண்டு முடிக்கப்பட்டு இருமுறை சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது.

ஆனால் அப்பொழுது வைகை அணையின் நீர்மட்டம் குறைந்ததால் கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்குவது நிறுத்தப்பட்டது.ஆனால் தற்போது மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் பெய்த கனமழையால் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அனையின் நீர்மட்டம் 71அடி கொள்ளளவு முழுவதும் நிரம்பின. அதனை தொடர்ந்து கடந்த ஜனவரி 16ம் தேதி வைகை அணையிலிருந்து 58கால்வாய் வழியாக மதகு திறக்கப்பட்டன.

நான்கு நாட்களில் சுமார் 23 கிலோ மீட்டர் தொலைவை கடந்து உத்தப்பநாயக்கனூர் அருகே 1கோடி மதீப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆசியாவின் 2வது தொட்டிப்பாலத்தை வைகை தண்ணீர் வந்தடைந்தது. அங்கிருந்து 13கிலோ மீட்டரை கடந்து 2நாட்களில் உசிலம்பட்டி கண்மாய்க்கு தண்ணீர் வந்தது.இதனைத் தொடர்ந்து 33 கண்மாய்களுக்கும் தண்ணீர் கொண்டும் செல்லும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்பநாயக்கணூர் கிராமத்திற்கு அருகாமையில் உள்ள பாறைப்பட்டி கண்மாய்க்கு தண்ணீர் செல்கிறது.பின் உ.புதுக்கோட்டை செல்ல வேண்டும்.

இது பற்றி முன்பே கணித்த உ.புதுக்கோட்டை கிராம மக்கள் உத்தப்பநாயக்கணூர் ஊராட்சிமன்ற தலைவர் செல்விஅர்ச்சுனன் உதவியுடன் உத்தப்பநாயக்கணூரிலிருந்து உ.புதுக்கோட்டை கண்மாய்க்கு வரும் வரத்து கால்வாய்களை ஆய்வு செய்து, தூர்வாரும் பணிகள் மேற்கொண்டனர்.உ.புதுக்கோட்டை கிராம மக்கள் நூறுநாட்கள் வேலை திட்டத்தின் மூலம் கடந்த இரண்டு மாதங்களாக வரத்து கால்வாயை தூர்வாரும் பணிகள் நடைபெற்றது.

சில பகுதிகளில் 100 நாள் வேலையென்றால் 1மணி நேரம் வேலை செய்துவிட்டு,மற்ற நேரங்களில் தூங்கிவிட்டு பொழுதைப் போக்குவார்கள் என்று தான் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் உ.புதுக்கோட்டை கிராமத்தில் 100 வேலையாட்கள் நம் கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் பணியாற்றினர். 100 நாள் பணியாட்கள் அனைவரும் முழுவீச்சில் சிறப்பாக வேலை செய்து வரத்து கால்வாயை சுத்தம் செய்தனர்.

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!