Home செய்திகள் சக மாணவர்களுக்கு பாடம் நடத்திய மாணவியை திட்டிய கல்லூரி பேராசிரியர் – மனமுடைந்த மாணவி தற்கொலை-உறவினர்கள் போராட்டம்

சக மாணவர்களுக்கு பாடம் நடத்திய மாணவியை திட்டிய கல்லூரி பேராசிரியர் – மனமுடைந்த மாணவி தற்கொலை-உறவினர்கள் போராட்டம்

by mohan

மதுரை மாவட்டம் திருமங்கலம் ராஜாஜி தெருவைச் சேர்ந்த செல்வகுமார் – ஜோதி தம்பதியினருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர் மூத்த மகன் தனியார் கல்லூரியில் நான்காம் ஆண்டு இன்ஜினியரிங் படிப்பு படித்து வருகிறார் இளைய மகளான பத்மபிரியா (21) திருப்பரங்குன்றம் சாலையில் சுப்ரமணியபுரம் மதுரை கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார் மாணவி பத்மபிரியா 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர் கல்லூரி படிப்பிலும் முதல் மாணவியாக திகழ்ந்து வந்துள்ளார் இதற்காக கல்லூரி நிர்வாகம் அவருக்கு தங்க மெடல் வழங்கி பாராட்டியுள்ளது இந்த நிலையில் கொரோனா ஊரடங்கிற்கு பின்பு கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டதால் கல்லூரி சென்று சென்று வந்த பத்மபிரியா கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கல்லூரி வகுப்பறையில் சக மாணவர்களுக்கு பாடம் தொடர்பான சந்தேகங்களை விளக்கிக் கூறியதாகச் சொல்லப்படுகிறது இந்த நிலையில் அந்த நேரம் வந்த கல்லூரி பேராசிரியர் முத்துக்குமார் மாணவி பாடம் எடுப்பதை கண்டு ஆத்திரமுற்று நீ என்ன ஆசிரியரா? பாடம் நடத்தும் அளவுக்கு பெரிய ஆள் ஆகி விட்டாயா என திட்டியபடி வகுப்பறையின் வெளியில் மாணவியை நிறுத்தியுள்ளார் அதோடு மட்டுமல்லாமல் சக மாணவர்கள் முன்னிலையில் திட்டியதாக சொல்லப்படுகிறது இதனால் மாணவி அவமானம் தாங்காமல் கண்ணீர் விட்டு அழுதுள்ளார் அழுதுகொண்டே இருந்த மாணவியை சக மாணவர்கள் தேற்றியபோது அவர்களையும் திட்டியதாக சொல்லப்படுகிறது கல்லூரி பேராசிரியர் சகமாணவர்கள் முன்னிலையில் திட்டியதால் சுமார் ஒரு மணிநேரம் வரை வெளியில் நிற்க வைத்துள்ளார் மனதளவில் பாதிக்கப்பட்ட மாணவி அன்று மாலை வீட்டிற்கு வந்தவர் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் விஷமருந்தி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார் இதை கண்ட பெற்றோர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் மாணவியை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் அங்கு மருத்துவர் கேட்டபோது நடந்த சம்பவத்தை கூறியுள்ளார் இதனையடுத்து மாணவியை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் கல்லூரி பேராசிரியரிடம் கேட்டபோது அவர்களையும் திட்டி அனுப்பியதாக சொல்லப்படுகிறது இதுகுறித்து கல்லூரி நிர்வாகமும் எந்த பதிலும் அளிக்கவில்லை என பெற்றோர்கள் குற்றம் சாட்டினர் இந்நிலையில் சிகிச்சையில் இருந்த மாணவி பத்மபிரியா வியாழக்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மாணவி உயிரிழந்ததால் பத்மபிரியாவின் சாவுக்கு காரணம் கல்லூரிப் பேராசிரியர் முத்துக்குமார்தான் எனவே அவரை கைது செய்ய வேண்டும் என திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகார் தொடர்பாக திருமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில் மாணவியின் உயிர் இழப்புக்குக் காரணமான கல்லூரி பேராசிரியர் மீதும் கல்லூரி நிர்வாகத்தின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை இறந்த மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!