Home செய்திகள் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு மருத்துவமனையை பராமரிக்க அரசு மற்றும் தனியார் நிறுவனம் நிதி உதவி பூமி பூஜையுடன் பணிகள் துவங்கின .

40 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு மருத்துவமனையை பராமரிக்க அரசு மற்றும் தனியார் நிறுவனம் நிதி உதவி பூமி பூஜையுடன் பணிகள் துவங்கின .

by mohan

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அரசு பொது மருத்துவமனை மற்றும் மகப்பேறு மருத்துவமனை செயல்பட்டு வருகின்றன இதில் பொது மருத்துவமனை 1980ஆம் ஆண்டு ராம்கோ நிறுவனம் சார்பில் பி எஸ் சி ஆர் ராமசாமி ராஜா என்ற பெயரில் துவங்கபட்டு செயல்பட்டு வருகிறது இந்த மருத்துவமனை தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இந்த மருத்துவமனைக்கு இராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதியை சேர்ந்த வெளிநோயாளிகள் நாளொன்றுக்கு 500 க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர் குறிப்பாக குற்றாலம் மற்றும் ஐயப்பன் கோவில் சீசன் நேரங்களில் செல்பவர்கள் இந்த சாலையை பயன்படுத்துவதால் விபத்து மற்றும் முதலுதவிக்கு இந்த மருத்துவமனையை நாடி வருகின்றனர் ஆகையால் இந்த மருத்துவமனை கடந்தாண்டு ஹைடெக் மருத்துவமனையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு சில காரணங்களால் சிவகாசிக்கு சென்றதுஇதை அடுத்து தற்போது இந்த மருத்துவமனை தேசிய தரச்சான்றிதழ் பெற்று பணிகள் நடைபெறுவதற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டதுஇராஜபாளையம் மருத்துவமனை மருத்துவ அதிகாரி பாபுஜி மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டு பூமி பூஜை போட்டனர் மராமத்து பணிகள் மற்றும் புதிய கட்டிடங்களை கட்டுவதற்கு பணிகள் தொடங்கியதுமருத்துவமனைக்கு அரசு ஒரு கோடி ரூபாயும் ராம்கோ நிறுவனம் 40 லட்ச ரூபாய் வழங்கியுள்ளதாகவும் மேலும் இராஜபாளையம் பகுதியை சேர்ந்த தன்னார்வலர்கள் அவர்கலாள் முடிந்த நிதி உதவியை மற்றும் பொருளைக் கொடுத்து இந்த மருத்துவமனையை தரம் உயர்த வேண்டும்ஆகையால் அனைவரும் உதவி செய்ய முன்வர வேண்டும் என மருத்துவமனை மருத்துவ அதிகாரி பாபுஜி கேட்டுக்கொண்டார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!