மதுரையில் தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் பேட்டி.

மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்று பட்ஜெட் எனவும் இந்த பட்ஜெட் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு எந்த பலனும் இல்லை வியாபாரிகளின் கோரிக்கை கடன் மீதான வட்டி தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது தான் ஆனால் அதை அரசு கண்டுகொள்ளவில்லை, சாலை விரிவாக்கத்திற்கு 1லட்சத்தி 3ஆயிரம் கோடியில் புதிய சாலை திட்டத்தை நிறைவேற்றி அதனை டோல்கேட் கட்டணம் மூலமாக வசூலிக்கும் திட்டமாகதான் உள்ளது டீசல் பெட்ரோல் விலை உயரும் வழிவகையில் தான் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது, மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அனைத்து பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளது.மத்திய அரசின் பட்ஜெட் ஒட்டுமொத்த வணிகர்களை ஏமாற்றி இருக்கிறது, எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதால் வெளிநாட்டவர்கள் இந்தியாவில் கால்பதிக்கும் நிலை உள்ளது. உள்நாட்டு பெரிய நிறுவனங்கள் சிறு வணிகங்களில் புகுந்து வியாபாரிகளின் வாழ்வாதரத்தை சிதைத்துவருவதற்கு மத்திய அரசு உதவியாக இருக்கிறது, எனவும் விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை, வேளாண் சட்டம் என்பது கார்ப்பரேட்டுகளை ஊக்குவிக்கும் சட்டம் என கூறிய விக்ரமராஜா மத்திய அரசின் பட்ஜெட்டை பாராட்டியுள்ள தமிழக முதல்வர் எதை கருத்தில் வைத்து இப்படி ஏமாற்றி பேசுகிறார் என தெரியவில்லை என்றும், ஆளுநர் மத்திய அரசின் பட்ஜெட்டை குறை சொல்லமாட்டார், மத்திய அரசின் புதிய சாலை நிதி ஒதுக்கீடு என்பது வாகன ஓட்டிகளிடம் டோல்கேட் மூலம் வசூல் செய்யும் வியாபார அறிவிப்பு தான் என்றார். வியாபாரிகள், விவசாயிகள், சாமானியர்கள் தேவையில்லை என்ற எண்ணத்தோடு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு உள்ளது, விவசாயிகள் போராட்டத்திற்கு வணிகர்கள் சங்க பேரமைப்பு ஆதரவுதான் இந்திய விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்திய பிரதமருக்கு தயக்கம் ஏன்? என கேள்வி எழுப்பினார்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..