டைட்டன் நிறுவனம் சார்பில் பள்ளி மாணவிகளுக்கு கையடக்க கணினி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் கல்வியில் மேம்படுத்துவதற்காக செங்கம் மற்றும் ஜவ்வாதுமலை ஒன்றியங்களுக்கு உட்பட்ட அரசுப் பள்ளியில் பயிலும் 5000 மாணவிகளுக்கு டைட்டான் நிறுவனம் மற்றும் நான்டி அறக்கட்டளையின் சார்பில் மைண்ட் ஸ்பார்க் தொழில்நுட்ப கையடக்க கணினி, புத்தகப் பை மற்றும் கல்வி உபகரணங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம், செங்கம் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலர், டைட்டன் நிறுவனத்தின் கூடுதல் துணை தலைவர் ஸ்ரீதர், திட்ட அலுவலர் பிரசாத், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் திருமால், மக்கள் தொடர்பு உதவி அலுவலர், ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேசியதாவது: பெண் குழந்தைகளின் கல்வி சிறக்கவும் மேம்படுத்தவும் டைட்டன் கான்யா நாந்தி அறக்கட்டளையின் மூலமாக மைண்ட் ஸ்பார்க் தொழில்நுட்ப கல்வி கற்றல் மேம்படுத்தவும் இதன் அனைத்து தயாரிப்புகளும் சேவைகளும் தீர்வுகள் தருகிறது. மாணவிகள் புரிதலுடன் கல்வி கற்க வேண்டும் என்பது இதன் முக்கிய நோக்கமாகும் இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சம் மாணவிகள் மைண்ட் ஸ்பார்க் வடிவமைத்த மதிப்பீடுகளை பயன்படுத்தி வருகின்றனர். அதன் பின்பு மாணவிகளுக்கு காலாண்டுதேர்வு வருடத்திற்கு மூன்று முறை நடத்தப்பட்டு மாணவிகளுக்கு ஒவ்வொரு வாரமும் தமிழ் மற்றும் கணிதம் தலா இரண்டு நாட்கள் ஆங்கிலம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என ஆறு நாட்கள் மைண்ட் ஸ்பார்க் செயல்பாடுகள் நடைபெறும். மாணவிகள் பயன்படுத்திட அனைத்து இடங்களிலும் இணைய வசதி தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது .இதன் மூலம் மாணவிகள் கற்றல் திறனுக்கு ஏற்ப பயிற்சி அளிக்கப்படுகிறது.இதன் மூலம் மாணவிகள் கற்றல் அறிவு முன்னேற்றம் அடைந்து நகர்ப்பகுதி பகுதி மாணவிகளுக்கு இணையாக மலைவாழ் மாணவிகள் கற்றல் நிலை மேம்பட உதவுகிறது. மாணவர்கள் நன்கு இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பேசினார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..