கமுதி.. பேரையூர் இளைஞருக்கு IWR நட்சத்திர விருது.

கமுதி அருகே பேரையூரைச் சேர்ந்த மங்களேஸ்வரன் (52) அவர்களது மகன் மனோஜ் பிரபாகரன் (19)க்கு IWR நட்சத்திர விருது வழங்கப்பட்டது. இந்தியன் வேல்ட் ரெக்காட் மற்றும் லயன்ஸ் கிளப் சார்பில் சென்னை ஆவடி அடையார் ஆனந்த பவனில் நேற்று 30.01.2021 சனிக்கிழமை நடைப்பெற்ற 2021 IWR நட்சத்திர விருது வழங்கும் விழா நடைப்பெற்றது.

இவ்விழாவில் சிறந்த எழுத்தாளர் விருது, சிறந்த திறமை விருது, சிறந்த பாடகர் விருது, சிறந்த நடன கலைஞர் விருது, சிறந்த மாணவர் விருது, சிறந்த கலைஞர் விருது, சிறந்த ஆசிரியர் விருது, சிறந்த சாதனையாளர் விருது, சிறந்த மனிதநேய விருது, சிறந்த அமைப்பு விருது, சிறந்த சமூக சேவை விருது, சிறந்த விளையாட்டு நபர் விருது, சிறந்த கராத்தே, யோகா விருது, உலக அமைதி விருது, இளம் சாதனையாளர் விருது, மேன் ஆஃப் எக்ஸலன்ஸ் விருது, மகளிர் விருது உள்ளிட்ட விருதுகள் பல்வேறு துறையில் சாதித்தவர்களுக்கு பாராட்டிற்காகவும், மற்றும் ஊக்கத்திற்காவும் வழங்கப்பட்டது.

இதில் கமுதி அருகே பேரையூர் கிராமத்தை சேர்ந்த தேசிய வலுதூக்கும் வீரர் மனோஜ் பிரபாகரன்(19) க்கு சிறந்த விளையாட்டு நபர் விருது வழங்கப்பட்டது. விருதை மாவட்ட நீதிபதி டாக்டர். ஜெயந்தி மற்றும் திருவள்ளுர் மாவட்ட பாதுகாப்பு அலுவலர் பாண்டியம்மாள் வழங்கினர்.மேலும் முதல் திருநங்கை உலக சாதனையாளரும் திருவள்ளுர் மாவட்ட நீதிமன்ற பேரா சட்ட தொண்டரும் சட்ட ஆலோசகருமான திருநங்கை டாக்டர்.விஜி பொன்னாடை போர்த்தி கவுரிவித்தார்.

நிகழ்ச்சியில் கமுதி பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி பேராசிரியர் முனைவர்.பால்பாண்டி ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் சிறப்பு விருந்தினராக உலக சாதனையாளர் திரைவுலக நட்சத்திரம் விஜய் டிவி பிக் பாஸ் போட்டியாளர் டாக்டர். மோகன் வைத்திய உட்பட பலர் பங்கேற்றனர்.

———————————————————————Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image