உசிலம்பட்டி பகுதியில் தொடர் மழையால் பயிட்டுள்ள சின்ன வெங்காயம் முற்றிலும் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியான நல்லுத்தேவன்பட்டி, லிங்கநாயக்கன்பட்டி, வலையபட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சின்னவெங்காயத்தை பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் வெங்காயம் நடவு செய்து 40 நாட்கள் ஆன நிலையில் சின்னவெங்காயம் விளைச்சல் அடையும் நேரத்தில் உசிலம்பட்டி பகுதியில் பெய்த தொடர்மழையால் சின்னவெங்காயம் அனைத்தும் சேதமடைந்துள்ளது. இதனால் சின்ன வெங்காயம் முழுமையாக வளர்ச்சி பெறாமல் உள்ளது. ஏக்கருக்கு 5ஆயிரத்திற்கு மேல் செலவு செய்துள்ள நிலையில் செலவழித்த பணம் கூட கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் இது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுக்கு சேதம் குறித்து விவசாயிகள் தகவல் தெரிவித்தாலும் இதுவரை சேதமடைந்த பகுதிகளை அதிகாரிகள் பாரிவையிட வரவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் தோட்டக்கலைத்துறையிலேயே வெங்காய விதைகள் வாங்கி நடவு செய்துள்ள நிலையில் பாதிப்படைந்த சின்னவெங்காய பயிர்களுக்கு தமிழக அரசு உடனடியாக நிவரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உசிலை சிந்தனியா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..