இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்த 4 மீனவர்களின் குடும்பத்திற்கு.10 லட்சம் நிவாரணம்

இலங்கை கடற்படையின் தாக்குதலினால் உயிரிழந்த தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்களின் குடும்பத்தாருக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.மணிகண்டன் ஆகியோர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலை வழங்கி ஆறுதல் கூறினர்.புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 18.01.2021 அன்று ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் ஆரோக்கியஜேசு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில்
தங்கச்சிமடம் அந்தோணிராஜ் மகன் மெசியா, வட்டான்வலசை வெள்ளைச்சாமி மகன் நாகராஜ், கீழக்கரை தாதனேந்தல் செல்வம் மகன் செந்தில்குமார், இலங்கை தமிழர் அகதிகள் முகாமைச் சேர்ந்த நிக்சன் டார்வின் மகன் சாம்சன் டார்வின் ஆகிய 4 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இம்மீனவர்கள் 19.01.2021 அன்றே கரைக்கு திரும்பி இருக்க வேண்டும். அவர்கள் கரைக்கு திரும்பவில்லை என்ற விபரம் அறிந்தவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்பேரில் இந்திய கடலோர காவல்படை கப்பல், இந்திய கப்பல் படை கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் காணாமல் போன மீனவர்களை தேடும் பணி நடைபெற்றது. இந்நிலையில் காணாமல் போன 4 மீனவர்களும் இலங்கை கடற்படையின் தாக்குதலில் இறந்து விட்டதாக மீனவர் மூலம் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு முதல்வர் , இறந்த நான்கு மீனவர்களின் குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கிடவும், அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தகுதி அடிப்படையில் அவர்களின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு, அரசு நிறுவனங்களில் பணி வழங்கவும் உத்தரவிட்டார்.அதனடிப்படையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.மணிகண்டன் ஆகியோர் 4 மீனவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று அவர்களது குடும்பத்தாரிடம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கி ஆறுதல் கூறினார். மீன்வளத் துறை துணை இயக்குநர் பருதி இளம்வழுதி உடனிருந்தார்.

Hala’s – சமையல் போட்டி..

Masala varieties available in the market from 2nd February 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image